எம் பேரு நீச்சல் இல்லை

ஏன்டி பட்டணத்துப் புள்ள என்னடி பசங்க மாதிரி முழுக்காலு சட்டை, முழுக்கை சட்டை போட்டுட்டு வந்திருக்கற? எங்க ஊரு பொண்ணுகள கெடுக்கவா?
😊😊😊😊😊
பாட்டிம்மா திரைப்படத்திலயும் தொலைக் காட்சியிலயும் எல்லாக் கருமாந்தரங்களையும் உங்க ஊரு பொண்ணுங்க பாக்கறதில்லையா?
அதப் பாத்துக் கெடமாட்டாங்களா?
😊😊😊😊😊
சரி, சரி. அந்த எழவு கெடக்குது உடு.
உம் பேரு என்ன? உன்ன மாதிரியே உம் பின்னால ஒருத்தி வர்றா. உங்க ரண்டு பேரையும் பாத்தா ரட்டைப் பிறவிங்க போல தெரியுது. சரி, உம் பேரச் சொல்லு.
😊😊😊😊
எம் பேரு நீஷல். எம் பின்னாடி வர்றவ எந் தங்கச்சி.
😊😊😊😊😊
நீ 'நீசல்'ன்னா உந் தங்கச்சி ஈசலா?
😊😊😊😊
அவ பேரு ஈசல் இல்லீங்க பாட்டிம்மா. அவ பேரு பூசல்.
😊😊😊😊
என்ன எழவு பேருங்கடி இதெல்லாம். பூசல் சண்டை சச்சரவக் குறிக்கற சொல்லு. இது எந்த ஊரு பூசல்? உம் பேருக்கு அர்த்தம் என்ன?
😊😊😊😊
'நீஷல்' ங்கற எம் பேருக்கு அர்த்தம் கெடையாதுங்க பாட்டிம்மா. 'பூசல்' பூர்வீக அமெரிக்கப் பேரு.
😊😊😊😊😊😊
அந்தப் பேருக்கு என்னடி அர்த்தம்?
😊😊😊😊
'வசந்த காலத்து மலர்களுக்கு பிரியா விடை கொடுத்து அனுப்பறது' -ன்னு அர்த்தங்க பாட்டிம்மா.
😊😊😊😊😊
இந்தப் படிச்சவங்கதான்டி நம்ம தமிழையே கெடுத்து நாசம் பண்ணறாங்க. கொழந்தைகங்களுக்கு நம்ம தமிழ்ல பேருங்க இல்லாத மாதிரி கண்ட கண்ட பேருங்கள வைக்கறாங்க. வெக்கக் கேடுடி நீச்சலு.
😊😊😊😊😊
பாட்டிம்மா எம் பேரு நீச்சல் இல்ல...நீஷல்.
■■■■■■■■■■■■◆■■■■■■◆◆◆◆◆◆■■■■◆◆◆
சிரிக்க அல்ல. சிந்திக்க. தமிழுணர்வை வளர்க்க.

எழுதியவர் : மலர் (18-Feb-18, 12:26 am)
பார்வை : 271

சிறந்த நகைச்சுவைகள்

மேலே