இயற்கை விவசாயத்தின் மூலம் செயற்கை விவசாயத்தை முறியடிக்க வேண்டும் என்கிறார் தமிழ்நாட்டு விவசாய வல்லுநர்

இயற்கை விவசாயத்தின் மூலம் செயற்கை விவசாயத்தை முறியடிக்க வேண்டும் என தமிழ்நாட்டின் இயற்கை விவசாய வல்லுநர் எஸ். பாமயன் தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இயற்கை விவசாயம் தொடர்பான பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு உரையாற்
றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

இலங்கை நான் வந்தபோது இங்குள்ள நீர் வளத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனேன். தமிழ்நாட்டிலே தூய்மையான நீருக்காக நாள்தோறும் நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். இலங்கையிலே குறைந்தது நூறு அடியில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து நீரைப் பெற்றுக் கொள்ளலாம். தமிழ் நாட்டிலே பல கிராமங்களிலே ஆயிரம் அடிக்கு மேல் ஆழ்துளைக் கிணறு களை அமைத்துத்தான் நீரைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.
குடிதண்ணீருக்காக மக்கள் நீண்ட தூரம் அலைந்து கொண்டிருக்கின்றனர். தொடக்க காலங்களில் தமிழ் நாட்டில் பல கிராமங்களில் நல்ல நீரைப் பெற்றுக் கொள்ளக் கூடிய நிலைமை இருந்தது. ஆனால், நீரைத் தேவையற்ற முறையில் பயன்படுத்தி பயிர்ச் செ#கைகளை மேற்கொண்டு பயிர்ச் செ#கை கூட சூழலுக்கு ஒவ்வாத வகையில்இரசாயனப் பாவனைகளால் மண்ணையும் நீரையும் தன்மைகளில் இருந்து மாறு படக்கூடிய நிலைமையை உருவாக்கி விட்டது. எப்போதும் விவசாயிகள் குளங்களில் இருந்து பயிர்ச் செ#கைக்கு நீரைத் தாருங்கள் என்றுதான் போராடுவார்கள். ஆனால், தமிழ் நாட்டின் பல கிராமங்களில் குளங்களில் இரசாயனம் கலந்து இருப்பதன் காரணமாகவே நீரைத் திறந்து விட வேண்டாம் என்றே விவசாயிகள் போராடு கின்றனர். அந்தளவிற்கு மண்ணும் நீரும் தமிழ் நாட்டில் தன்மைகள் மாறி விட்டன.
எமது முன்னோர்களின் இயற்கை விவசாயத்தில் இருந்து நாம் எங்கேயோ சென்று இரசாயனம் கலந்த செயற்கை விவசாயத்தால் அழிவுகளுக்குள் சிக்குண்டுள்ளோம்.தற்போது எமக்குத் தேவைப்படுவது எல்லாம் இயற்கை விவசாயம்தான். எமது உணவுடன் நீருடன் இரசாயனம் கலப்பதன் காரணமாகவே தேவையற்ற நோ#கள் உருவாகின்றன. பிறக்கின்ற குழந்தைகள் கூட நோ#களுடனும் குறைபாடுகளுடன் பிறப்பதற்குக் காரணமே நாம் உண்ணும் உணவும் பருகும் நீருமே காரணமாக அமைகின்றன.
எனவே, இயற்கை விவசாயத்தின் அறிவையும் அவசியத்தையும் எல்லோரும் விளங்கிக் கொண்டு செயற்பாட்டில் இறங்க வேண்டும். எமது முன்னோர்களின் விவசாய முறைகள் இயற்கை விவசாயம் சார்ந்தவையாகவே அமைந்திருப்பதன் காரணமாக அதன் அறிவுகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். செயற்கை விவசாயத்தில்
இருந்து விடுபடுவதன் மூலமே மண்ணையும் நீரையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். (காலைக்கதிர்)

--------------------------------------------------------------------------------

எழுதியவர் : (18-Feb-18, 4:28 pm)
பார்வை : 182

சிறந்த கட்டுரைகள்

மேலே