எந்நேரமும் உன் பாதக் கமல த்யானம் - புன்னாகவராளி ராகம்

17.02.2018 அன்று மாலை 6 மணிக்கு மதுரை ஃபார்ச்சூன் பாண்டியன் ஓட்டலில் நடைபெற்ற ’ராகப்ரியா’ இசை நிகழ்ச்சியில் பாடகி திருமதி அனன்யா அஷோக் பாடிய பாடல்களில் ஒன்று ஷ்யாமாசாஸ்திரி இயற்றிய புன்னாகவராளி ராகத்தில் அமைந்த 'எந்நேரமும் உன் பாதக் கமல த்யானம்' என்ற பாடல்.

பல்லவி:

எந்நேரமும் உன் பாத கமல த்யானம் செய்துகொண்டு
உன்னை நம்பினேன் நம்பினேன் நம்பினேன் அம்மா

அனுபல்லவி:

என்னை ரக்ஷிக்கச் சொன்னேன் சொன்னேன்
சொந்த மைந்தன் நான் அல்லவோ
அன்னை பின்னையுண்டோ எனக்கு
அகிலாண்டேஸ்வரி சிவசங்கரி (எந்நேரமும்)

சரணம்:

ஆதி சக்தி உந்தன் மகிமையை துதி செய்யலாகுமோ
பரமன் முதலான பேருக்கு ஆதியே பரஞ் ஜோதியே
பங்கய கன்னியே (ஆதி சக்தி)

ஏதம்மா ஏதம்மா பராமுகம் செய்யக் கூடாதம்மா
ஏதம்மா பராமுகம் செய்யக் கூடாதம்மா
நீ கருணைக் கடலல்லவோ (ஏதம்மா)

ஸ்யாமா கிருஷ்ணன் சோதரி உன்னைத் துதி
செய்யாமல் இருப்பேனோ உன் பாதங்களை
மறவாமல் இருக்க வரந்தருவாயே சுக
ஸ்யாமளே நித்யகல்யாணி
தாமதம் இனி செயதால் நான் இப்போ
தாங்குவேனோ தாயே அகிலாண்டேஸ்வரி (எந்நேரமும்)

Enneramum un paadha - Punnagavarali - Shyamasastri - Nithyasree mahadevan என்று யு ட்யூபில் பதிவு செய்து நித்யஸ்ரீ பாடுவதைக் கேட்கலாம்.

Syama Shastri Kriti-ennEramum-un--punnAgavrali-Triputa-Ambujam என்று யு ட்யூபில் பதிவு செய்து அம்புஜம் கிருஷ்ணா பாடுவதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Feb-18, 10:20 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 107

மேலே