நிலவின் கர்வம்

நீல வானில் வெண்ணிலவு
பௌர்ணமி நிலவு
காதலர் உள்ளங்களில்
பரவசம் சேர்க்கும்
காதலர் நிலவு

அந்த நிலாவைப்பார்த்து
வானம் சொன்னது
'நிலவே என் மடியில் நீ
உலாவி வருகின்றாய்
இதை ஒருபோதும் நீ
மறந்து விடாதே ............
உலகே என்னை மறந்து
உன் அழகை மட்டும்
கொண்டாடிடலாம் ஆனால்
நிலவே உனக்கு தெரியும்
நான் இல்லை என்றால்
நீ இல்லை என்று"

பாவம் வானம் வெறும்
வானத்தை கவிஞர்
கவிபாடுவதில்லையே ............

நீலவானில் மின்னும்
நீல ரத்தினங்கள் போல்
மின்னும் தாரகைகள் ,
நிலவைப் பார்த்து
" நிலவே உன் மனதில்
என் இந்த கர்வம்
நாங்கள் தாரகைகள்
தானாக ஒளிர்விட்டு மின்னுபவர்கள்,
இத்தனையேன் உனக்கு
ஒளிதந்து உன்னை உயிர்ப்பிப்பவன்
ஆதவன் எம்மைப்போல் தாரகையே
நீ மறந்தாயா .............என்றனவாம்

பாவம் தாரகைகள்
அவற்றைப் புகழ்ந்து
பாடிட கவிஞரும் இல்லை
காதலரும் இல்லையே , வேண்டுமென்றால்
சிறுவர்கள் 'சின்ன சின்ன
தாரகையே, சிமிட்டிடும்
தாரகையே என்று தானே பாடுவார்
வெறும் சிமிட்டும் தாரகைகள்...........


இப்படி எண்ணிய நிலவு பாவம்
ஒளிமங்கி தேய துடங்கியது
தேய்ந்து தேய்ந்து
காணாமலும் போனது ..........
கர்வம் அடங்கியது ..............
மீண்டும் வானில் உலாவ வந்தது
வளர் நிலவாய் ஒளி நிலவாய்

( பாடம்: யானைக்கும் அடி செருக்கும்
ஒரு நாள்; விநயம் வேண்டும் வாழ்க்கைக்கு)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-vasudevan (19-Feb-18, 3:10 pm)
Tanglish : nilavin karvam
பார்வை : 235

மேலே