சிரபுஞ்சி நிலம்

என்மனதை மயக்கிய
உன் தேன் கனி உருவம்
கண்ட நாள் முதல்
சிரபுஞ்சி நிலம் மாதிரி
என்நெஞ்சம் உன்னோடு
காதலில் செழித்துக் கிடக்கிறது
இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான்
உன் நெஞ்சை வறண்ட பாலையில்
வைத்துத் தவிக்க விடப் போகிறாய்
வந்துவிடேன் என்னிடம்
உனக்கு அன்பு மாரி பெய்ய
ஆவலாய்க் காத்துக் கிடக்கிறது
என் உருவமும் அதன் மார்கழிப் பருவமும்
ஆக்கம்
அஷ்ரப் அலி