எனது பட்டம்

அரைமேனி ஆடை
அரைவயிறு சோறு
உடல்முழுதும் சேறு
நாள் முழுதும் உழைப்பு
உழைப்பின் வெகுமதி வியர்வை
படிப்போ ஒன்றுமில்லை
பட்டமோ விவசாயி
வாழ்க்கை செழிப்பு
நிலத்தின் அறுப்பில்
தண்ணீர் இல்லை
விடுகிறோம் கண்ணீரை

எழுதியவர் : டேவிட் ஸ்ரீ (20-Feb-18, 5:12 pm)
சேர்த்தது : davidsree
Tanglish : enathu pattam
பார்வை : 92

மேலே