காதல் காலனின் சதி

உன்னை பாராமல் பகல் பொழுது கழிவதில்லை.
உன்னை தரிசனம் செய்யாமல்
இரவு கனவும் கலைவதில்லை..
உன் இதயத்தில் சிறை பட துடிக்கும் பறவையை,
சிறகொடித்து சுதந்திர பறவையாக பறக்கவிட்டால் அது நியாயமோ..
என் கண்ணீர் திவலைகளால்
உன் நினைவு தாமரைகள் வாழ்வது வரமோ..
இல்லை,
கற்றாளையில் பூத்த பாவத்தால்,
உன் கருங்கூந்தலை சேராதது சாபமோ,
உன் மூச்சு காற்றில் சுவாசித்தல் நரகமாகுமா..
என் மூச்சு உன் மடியில் நின்றால் சொர்க்கம் சேருமா..
உன்னை கானாது காத்திருந்தேன் சேதி தெரியுமா..
இது காலனின் சதி என்று உனக்கு புரியுமா.

எழுதியவர் : சையது சேக் (20-Feb-18, 5:14 pm)
சேர்த்தது : சையது சேக்
பார்வை : 96

மேலே