அழகான நாட்கள்

இமைகள் இமைக்காமல்
இதயம்
தொலைத்த நாட்கள்!

இதழை சுவைக்காமல்
இரவை
கழித்த நாட்கள்!

புன்னகை கசங்காமல்
பூவையை
ரசித்த நாட்கள்!

புவி மொத்தமும்
புதிதாய்
தெரிந்த நாட்கள்!

மூச்சுக்காற்றை
பரிமாறிக்
கொண்ட நாட்கள்!

பேச்சு மொத்தமும்
மௌனமாய்
போன நாட்கள்!

பாவை உன்னை
எண்ணி
பறிதவித்த நாட்கள்!

இன்று!
எண்ணி
பார்த்தாலும்
எனக்குள்ளே
இனிக்கிறதே!

உனக்கும் இனிக்கிறதா! சொல்லிவிடு!
தேன்மொழியே!

எழுதியவர் : சுதாவி (20-Feb-18, 9:28 pm)
Tanglish : azhagana nadkal
பார்வை : 1104

மேலே