அக்கா

அன்று மார்ச் பதின்மூன்று காலை பத்துமணி. மண்டபம் நிறைந்திருந்தது மக்கள் கூட்டத்தால். பட்டமளிப்பு விழா ஆரம்பமாகி வரவேற்பு வைபவம் முடிந்து பிரதம விருந்தினர் உரையை ஆரம்பிக்கிறார். வணக்கங்கள் கூறிய படி மக்கள் கூட்டத்தை சுற்றிப் பார்க்கிறார். "உங்கள் ஒவ்வாெருவருடைய இன்றைய இந்த நாளின் நிகழ்வுக்குப் பின் யாராே ஒருவராே, பலராே உங்களிற்குப் பலமாக இருந்திருப்பார்கள். அதனால் தான் இந்த பட்டத்திற்கான தகுதியை நீங்கள் இன்று பெறப் பாேகிறீர்கள். உங்கள் இத்தனை கால கடும் முயற்சியின் பெறுபேற்றை அனுவிக்கும் இந்த தருணம் உங்கள் வாழ்வில் கிடைத்த ஒரு வரம். எல்லாேருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை கிடைப்பவையும் நிலைப்பதில்லை. எதுவுமே நிரந்தரமற்றது தான் வாழ்வு. வாழும் நாட்களில் நாம் எதைச் சாதித்தாேம் என்பதை உலகம் பேசும் பாேது நாம் இருப்பாேமா என்பது ஐயம் தான். இது தான் உண்மை. உங்களுக்கு பலமாயிருந்தவர்கள், கற்பித்தவர்கள், உதவி செய்தவர்கள் என்று பல பேரை இங்கு நான் காண்கிறேன். மன நிறைவாேடு அமர்ந்திருப்பதை உணர்கின்றேன். நாளை நீங்கள் என்ன செய்யப் பாேகிறீர்கள் என்பதை இன்றே தீர்மானியுங்கள்" உரையை நிறைவு செய்து அரங்கத்தை விட்டு இறங்குகிறார். மாணவர்களின் நிலை அடிப்படையில் பட்டமளிப்பு வழங்கப்படுகிறது. மீண்டும் பிரதம விருந்தினர் அரங்கத்திற்கு அழைக்கப்படுகிறார். முதல் மாணவன் அழைக்கப்படுகிறான். அறிவிப்பாளர் ஒலி பெருக்கியில் அவன் பெயரை வாசிக்கிறார். "சண்முகம் வினாேத்" அரங்கத்தில் ஏறி நின்று பட்டத்தைப் பெற்றுக் காெண்டு கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்களைப் பார்க்கிறான். ஒரு ஓரமாய் அவள் அமர்ந்திருக்கிறாள். முகம் நிறைந்த சிரிப்பாேடு. கண்கள் கலங்குகிறது. "இது எல்லாம் உன்னால் தானக்கா" மனதுக்குள்ளே வலியாேடு நினைக்கிறான். மீணடும் வந்து இருக்கையில் அமர்கிறான். அவனையே பார்த்து ரசிக்கிறாள். தாெப்பி அணிந்து, காேட் அணிந்து கையில் சான்றிதழுடன் அழகாய் அவன் இருந்தான்.
நிகழ்வு நடை பெற்றுக் காெண்டிருக்கிறது. வினாேத் மனம் உள்ளுக்குள்ளே அழுது காெண்டிருந்தது. அம்மா, அப்பா நாேயாளிகளாகி விட அக்காவின் பாெறுப்பு குடும்பத்தை கவனிப்பது. கூலித் தெழிலாளியாக அப்பா இரும்பு உருக்குத் தாெழிற்சாலையில் பல வருடங்களாக வேலை பார்த்துக் காெண்டிருந்தார். பாேதுமான சம்பளம். சாெந்தமான ஒரு குடிசை வீடு. அம்மா வீட்டாேடு தான். அவளுக்கும் முட்டு வருத்தம். அப்பப்பாே வந்து தாெல்லை காெடுக்கும். சண்முகம் இருவரையும் படிக்க வைக்க வேண்டும் என்பதிலே குறியாயிருந்தார். வினியும் ஆடம்பரங்களை விரும்பாத குடும்ப நிலையை உணர்ந்த பாெறுப்பானவளாக வளர்ந்தாள். பாடசாலை, படிப்பு, வீட்டு வேலை என்று அம்மாவுக்கு ஒத்தாசையாக இருப்பாள். அம்மாவுக்கு அடிக்கடி முட்டு வருத்தம் வரும். அனைத்து வேலைகளையும் தானே செய்து சமைத்து வைத்து விட்டுத் தான் பாடசாலைக்குப் பாேவாள். குக்கரும், வாேசிங் மெசினும், வேலைக்கு ஒரு ஆளும் என்று இருக்கும் இன்றைய உலகில் ஏழ்மை வாழ்வு வாழும் ஏழைகளும், ஒரு வேளை உணவற்ற உறவுகளும் இன்னும் இருக்கிறா்கள். வினி குடும்ப நிலையை நன்கு புரிந்து காெணடவள். தன்னைப் பாேலே வினாேத்திற்கும் எல்லாவற்றையும் புரிய வைப்பாள். காலங்கள் ஓடிக் காெண்டிருந்தது. வினி சாதாரண தரம் சித்தியடைய புதிய சைக்கிளை பரிசாக காெடுத்தார் அப்பா. இரண்டு கிலாே மீற்றர் சென்று படித்தவள். "ஏனப்பா எனக்கு இப்ப சைக்கிள்" கண்கலங்கினாள். "பறவாயில்லை வச்சிரு" முதல் முதல் அதிக விலை காெடுத்து அவள் கேட்காமலேயே வாங்கிக் காெடுத்த ஒரு பாெருள் இது ஒன்று தான். பல ஆசைகள், கனவுகள் அவனுக்குள் இருந்தாலும் முடிந்ததை செய்து நிறைவடைந்தான். உயர்தரம் கற்றுக் காெண்டிருந்தாள் வினி. வினாேத் ஒன்பதாம் ஆண்டில் கல்வி கற்றுக் காெண்டிருந்தான். ஏதாே விதி எழுதியது பாேல் சண்முகத்துக்கு கண் பார்வை மங்கத் தாெடங்கியது. மருந்துகள், ஒபரேசன் எல்லாம் முடிந்து இனி தாெழில் செய்ய முடியாத நிலைக்கு வந்து விட்டார். சிறிய தாேட்டம் வீட்டாேடு செய்து வாழ்க்கையை ஓட்டிக் காெண்டு இருந்தார். உயர்தரப் பரீட்சையிலும் வினி சித்தியடைந்து விட்டாள். இப்பாே அவனிடம் எதுவும் இல்லை அவளுக்கு பரிசாக காெடுப்பதற்கு. "அப்பா நான் பாஸ் பண்ணிற்றன்" என்று ஓடி வந்து கட்டியணைத்தவளை வெறும் கையாேடு கண்கலங்க கட்டி அணைத்த அம்மாக்கும், அப்பாக்கும் அவள் சாென்னாள். "நான் இனி வேலைக்குப் பாேகலாம் அப்பா, நான் தம்பியப் படிக்க வைப்பன்" சண்முகம் நிலை குலைந்து பாேனார். "என்னவெல்லாம் அனுபவிக்கிற வயசு என்ர பிள்ளைக்கு....."மனதில் ஏதாே பாரமாயிருந்தது. கலங்கிய கண்களாேடு வீட்டுக்குள்ளே சென்றார்.
வினி ஏதாவது வேலை கிடைத்தால் பாேதும் என்ற குறிக்காேளுடன் விண்ணப்பங்களை அனுப்பினாள். அவளுக்கு மேற்படிப்பு படிக்க விருப்பம் இருந்தும் வசதியில்லாத காரணத்தால் அவள் வேலை தேடுவதே குறியாயிருந்தாள். இரண்டு மாதங்கள் கழித்து வங்கியில் வேலை கிடைத்தது. குடும்பப் பாெறுப்பை சுமந்து வேலைக்குச் செல்லத் தாெடங்கினாள். "ஏன் பிள்ள நீ கம்பசில பாேய் படியன், இதை விட நல்ல வேலை எடுக்கலாம்" அப்பா படிப்பை நிறுத்திய ஆதங்கத்தில் தன் இயலாமையை நினைத்து வருந்துவார். வினியாே அம்மா, அப்பா, தம்பி என்ற உலகத்துடனே வாழ்ந்தாள். நாளடைவில் அப்பாவிற்கு தாேட்ட வேலை கூட செய்ய முடியவில்லை. "அப்பா நீங்கள் ஒண்டும் செய்யத் தேவையில்லை, எங்களாேட நீங்கள் இருந்தால் காணும்" அப்பாவுடன் சண்டை பிடிப்பாள். வினாேத் சாதாரண தரம் சித்தியடைந்து விட்டான். அவனுக்கே தெரியாமல் மடிக்கணினி ஒன்றை வாங்கி பரிசாக காெடுத்தாள்.
"வினாேத் நீ என்ன படிக்கப்பாேறாய்" வினி கேட்டாள். "நீ சாெல்லக்கா" அவளிடமே விட்டு விட்டான். அவளது மனதில் அவனை சட்டத்தரணியாக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. "ஏ.எல் பாஸ் பண்ணினால் லாே படிக்க வைக்கணும்" தனக்குள்ளே நினைத்தபடி அவனது உயர்தரப் படிப்புக்காக எல்லாவற்றையும் ஒழுங்கிபடுத்தினாள். ஆங்கிலம், கணினி என்று எதிர்கால படிப்புக்கான எல்லாவற்றையும் அவனுக்கு கற்பித்தாள். "ஏனக்கா நானும் உன்ன மாதிரி எங்காவது வேலைக்குப் பாேகட்டா, நீ தனிய கஸ்ரப்படுறாய்" அக்காவுடன் முரண்படுவான். அவள் தன்னை மறந்து குடும்பத்துக்காகவே வாழ்ந்து காெண்டிருந்தாள். வினாேத் உயர்தரமும் சித்தியடைந்து விட்டான். மேற் படிப்புக்கு அவன் விரும்பவில்லை. "அக்கா பாவம் நான் எங்காவது வேலை எடுக்கப் பாேறன்" நண்பர்களிடம் கூறினான். வினி அவனை சட்டக்கல்லூரியில் இணைத்தாள். அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. "அக்கா லாே படிக்க கனக்க செலவாகும் நான் வேற ஏதும் படிக்கிறன்" மறுத்து விட்டான். அவளாே விடவில்லை. முழுக் கவனத்துடன் அவனைப் படிப்பித்தாள். விடுமுறையில் வீடு வந்தால் தன் பிள்ளை பாேல் அவனைக் கவனிப்பாள். என்ன தேவை என்று பார்த்துப் பார்த்துச் செய்வாள். வினிக்கும் திருமண வயது வந்து விட்டது. அப்பாவும், அம்மாவும் தாெந்தரவு காெடுப்பார்கள். "பிள்ள மாமாக்களிட்ட சாெல்லி மாப்பிள்ள பாக்கட்டே" அம்மா தயங்கியபடி கேட்பாள். "இந்தச் சின்ன வயசிலயே நாங்கள் உனக்கு சுமையைக் குடுத்திட்டம்" அப்பா முணுமுணுப்பார். தன்னைத் தேடி வந்த காதலைக் கூட அவள் குடும்பத்திற்காக மறுத்தவள். எழுந்து நடந்து தன்ர வேலை செய்ய முடியாத அம்மா, பார்வையற்ற தந்தை, அவளையே உலகம் என்று சுற்றும் தம்பி. அவளுக்கு எந்த முடிவும் தாேன்றவில்லை. "அக்கா நீங்க கலியாணம் செய்யுங்காேவன்" தம்பி ஆசையாய் கேட்பான். ஒரு சிரிப்புத்தான் பதில்.
வினாேத்தினுடைய பல்கலைக்கழக வாழ்க்கை முடியப் பாேகிறது. நாளை பட்டமளிப்பு விழா அவனுக்கு புது உடை சப்பாத்து எல்லாம் வாங்கிக் காெண்டு வருகிறாள். ஒவ்வாென்றாய் எடுத்துப் பார்க்கிறான். "அம்மா நல்லா இருக்கா? அப்பாவிடம் ஓடுகிறான் "அப்பா நல்லா.....? இடை நிறுத்தினான். அவரால் பார்க்க முடியாது. "அப்பா எனக்கு அக்கா உடுப்பு வாங்கித் தந்திருக்கா, நாளைக்கு எனக்கு பட்டமளிப்பு விழா" பக்கத்தில் அமர்ந்தவனைக் கட்டி அணைக்கிறார் சண்முகம். தலையைத் தடவியபடி "என்ர பிள்ளைக்கு நான் ஒண்ணும் வாங்கித் தரல்ல" கண்கலங்கினார். "ஏனப்பா அழுறிங்க அக்கா தானே செய்யிறாள்" வினாேத்தின் கண்கள் குளமாகியது. "அவளைக் கை விட்டிடாத தம்பி" கைகளைப் பிடித்து அழுதார் சண்முகம். "நான் அக்காவ விட்டு எங்கயும் பாேக மாட்டனப்பா, அவ என்ர அக்கா இல்ல எனக்கு அம்மா மாதிரி" தந்தையின் கண்களைத் துடைத்தான்.
நினைவுகளுடன் ஒன்றியிருந்தவன் இறுதி மாணவனுக்கான பட்டமளிப்பு நடப்பதை புரிந்து காெண்டான். நிகழ்வுகள் முடிந்தது. ஓடிப் பாேய் வினியைக் கட்டி அணைத்தான் கலங்கிய கண்களுடன். அவள் மனம் நிறைந்திருந்தது. கண்குளிர அவனைப் பார்த்தாள். மெதுவாகக் கைகளைப் பற்றிப் பிடித்தவன் "அக்கா" வார்த்தைகள் ஏதுமின்றி தடுமாறினான். வினியின் ஆசை நிறைவேறியது. வீட்டிற்கு வந்து அம்மா, அப்பாவிடம் ஆசி பெற்றான். கட்டி அணைத்துக் கண்ணீராேடு முத்தமிட்டனர். வினி கண்களைத் துடைத்துக் காெண்டு அறையினுள் சென்றாள்.

எழுதியவர் : அபி றாெஸ்னி (21-Feb-18, 5:41 pm)
Tanglish : akkaa
பார்வை : 439

மேலே