குப்பை தொட்டி குழந்தைகள்

ஆடைகள் எதுவுமின்றி அழுது கொண்டே பிறந்தாய்.
பிஞ்சு என்றும் பாராமல் நெஞ்சில் நஞ்சு கொண்டு,
நஞ்சு கொடியான தொப்புள் கொடியையும் அறுத்து எறிந்து சென்றுவிட்டாள்.
குப்பைகளையே ஆடையாக்கி,
குப்பை தொட்டிகளையே தொட்டிலாக்கி,
வீதியில் கிடத்தி விட்டு.
விதி என்று சென்று விட்டாள்.

ஈக்களும் கொசுக்களும்
எறும்புகளும் புழுக்களும்
பூச்சிகளும் விஷ சந்துகளும்
உன்னை தீண்டி விட்டு பாவமென சென்று விட்டது.
அபாய குரலாய் உன் அழுகை பயன்படுத்தியும்
அபயம் அளிக்க இங்கு எவருமில்லை.
பசியில் துடித்தது கூட நினைவில்லாமல் போனது
நீ நினைவிழந்து மயங்கியதும்.
குப்பை தொட்டியும் இன்று உயிரோடு புதைக்கும் கல்லறையாக மாற்றிவிட்டனர்.
கத்தல் துணிகளே
உனக்கு கபனிடும் துணியாக மாறியதுதான் இன்னும் வலிக்கிறது.
யாரோ இருவரின் சந்தோஷத்திற்காக
எங்கோ ஓரிடத்தில் உன்னை போன்றோரை வெளிக் கொண்டு வர
கர்ப்ப பையை நிரப்பி கொண்டுதான் இருக்கிறார்கள்.
நவீன விபச்சார கூட்டத்தினர்...

எழுதியவர் : சையது சேக் (21-Feb-18, 5:57 pm)
பார்வை : 612

மேலே