நானும் கவிஞன்
நானும் கவிஞன் என்றானேன் - கேட்டீரோ!
பொடியனின் வார்த்தைகளை கேட்டீரோ!
பருவப்பெண்ணின் தாவணியால் அல்லாது - கயவர்கள்
கூட்டமதன் சூழ்ச்சியினால் கவிஞன்.
உளமது என்னுள் பொங்கிடவே - இங்கே
உள்ளதை உரைத்திடநானும் வந்தேன்.
கடல்தனை தடுத்திடும் அணையுமுண்டோ! - நானோ
கரைதனை நனைத்திடும் நீராவேன்.

