ஏன் ஏனென்றோம்

மனித வாழ்க்கை பொய்யடா
பொய் உடல் அவனது மெய்யடா
பிறப்பும் இறப்பும் சதியடா
கேட்டால் பதில் "அது விதியடா"

இறைவன் நம்மை சோதிக்க
இயற்றப்பட்ட வழியடா
எனச் சொல்லிச் சொல்லி
விடுவார் நம்மிடம் கதையடா

சோதிக்க இது என்ன
சோதனைக் கூடமா
அப்படியெனில் நாங்கெல்லாம்
அடிமைக் கூட்டமா

நல்லதையே படைத்துவிடு
தீயதையெல்லாம் அழித்து விடு
முழு உயிர்களையும் அறிவாக்கு
இல்லையேல் அடி மூடராக்கு

குறைகுடம் கூத்தாடியே
குழப்பங்களை தெளிவாச்
சொல்லும் கேள்விகளைத்
தொடுக்கிறேன் விடைகான

ஏன் உதித்தோம் ?
ஏன் களித்தோம்?
ஏன் துடித்தோம்?
ஏன் சபித்தோம்?
ஏன் தோற்றோம்?
ஏன் ஏனென்றோம்??

பதிலறியா கேள்விக்கு
வாழ்வின் முற்றில்
பதிலுண்டு எனப்
பலர்ச்சொல்ல
பதிலறிய
முற்பற்று
முடியிழந்து
முற்றுமிழந்து
அடிதளர்ந்து
தடி உடைந்து
மண்ணோடு மண்ணாவோம்
பதிலில்லாமல் செத்தேபோவோம்

எழுதியவர் : கோரா.தணிகைமணி (21-Feb-18, 10:44 pm)
பார்வை : 58

மேலே