களுவம்மாவின் காதல்

தற்போது இலங்கையில் வாழும் இனங்களுள் ஆதிக் குடிகளாகக் கருதப்படுபவர்கள் வேடுவர். இவர்களை பொருள்பட "வெத்தா" எனப் பெயரிட்டு அழைத்தாலும், இவர்கள் தங்களை "வன்னியலா எத்தோ" (Wanniyala-Aetto) என்றே குறிப்பிட்டு கொள்கின்றனர். இதன் பொருள் "காட்டைச் சேர்ந்தவர்கள்" அல்லது "காட்டில் வாழ்பவர்கள்" அல்லது "காட்டிலுள்ள மக்கள்" என்பதாகும். நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளிலுள்ள காடுகளில் இவர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள். வன்னியலா எத்தோ மக்களின் வாழ்வியல் தனித்துவமானது, எனினும் இலங்கையின் பிற இன மக்களுடன் பின்னிப்பிணைந்தவர்கள் . குறிப்பாக இலங்கை கிழக்கு கரையோர காட்டுப் பகுதியில் வசிக்கும் இவ்வின மக்களின் சில குழுக்கள் தமிழ் போன்ற ஒரு மொழி பேசுகின்றார்கள். முருகனை குலதெய்வமாக வணங்குறார்கள்

சிங்கள பாஷையில் “களு” என்பது கருப்பு நிறத்தைக் குறிக்கும்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்க்களப்பு நகரத்துக்கு மேற்கே அமைந்த மதுறு ஓயா நீர்த்தேக்கம் கொழும்பில் இருந்து கிழக்கே 290 கிமீ தரத்தில் உள்ளது இதை சுற்றயுள்ள வனப் பூங்கா பகுதியில் வாழும் பின் தங்கிய இலங்கையின் பூர்வ குடிகளான வேடவக் குடும்பத்தில் பிறந்தவள் “களுவம்மா” என்ற வேடவப்பெண் . அவள் தமிழ் நாட்டில் பிறந்திருந்தால் கருத்தம்மா என்று பெயர் வைத்திருப்பார்கள். பிறந்து சிறு நாட்களுக்குள் கள்ளிப் பால் கொடுத்து அவள் உயரை போக்கி இருப்பர் அவளின் பெற்றோர்.. காரணம், அவள் நிறத்தில் கருப்பு அதோடு அவள் ஒரு பெண்.
ஆனால் “தம்பண்ணா” என்ற மதுறு ஓயா வன பூங்கா பகுதியில் சுமார் இருநுறு வேடவக் குடும்பங்கள் கொண்ட அக்கிராமத்தின் தலைவனின் மகளாய் பிறந்தவள் களுவம்மா. . வேடவப் பெண்கள் அக்கிராமத்தில் தெய்வமாக கருதப்பட்டனர். காரணம் வேடவப் பெண்களின் எண்ணிக்கை குறைவு. பொதுவாக வேடவர்கள் நிறம் குறைந்தவர்கள். தங்கள் இனம் பெருகப் பெண்கள் அவசியம் எனவும், முருகனின் இரண்டாம் மனைவி வேடவப் பெண் வள்ளி என்பதையும் அவர்கள் அறிவார்கள். வள்ளி காதலித்து திருமணம் செய்தாள். அதனால் அவ் வேடவர்கள் வாழும் கிராமத்தில் கட்டுப் பாடுகள் இருந்தும் தம் இனத்து ஆடவர்களை வேடவப் பெண்கள் திருமணம் செய்வதையே விரும்பினார்கள்.
****
களுவம்மா பிறக்கும் போது அவள் நிறம் கருப்பானாலும் முகத்தில் ஒரு தனிழகு. நீண்ட மூக்கு , பெருத்த கண்கள். அவள் வளர்ந்து மூப்படைந்தவுடன்
அவளின் கருப்பழகும, கருவிழியும், அவள் சிரித்தால் அவளின் முத்துப் பற்ளின் தோற்றம் இருளில் மின்னல் போன்றது, கூவிடும் கன்னங்ள் கருத்த குயிலழகு, அக் கிரமத்தில் அவள் கருவழகை இரசிக்காதவர்களும், அவளைத் தெரியதவர்கள் இல்லை. அவள் படு சூடி. அளந்து பேசுவாள். மாணவிகள் எப்போது அவளை சூழ்ந்து நிற்பர். அமைதியானவள். அவள் பேசுவது குறைவு. தந்தை “திசஹாமி அத்தோவின்” செல்ல மகள். பக்கத்து வேடவக் கிராமத்தின் தலைவர் மகனுக்கு அவளைத் திருமணம் செய்து வைத்து இரு கிராமங்களையும் இணைப்பதே திசஹாமியின் திட்டம்

அக்கிராமத்தில் பத்தாம் வகுப்பு வரை உள்ள சிறு பாடசலைக்கு அரசியல் காரணத்தால் மாற்றலாகி வந்தவன் அருணாநாயக்கா என்ற கண்டியைச சேர்ந்த பயிற்சி பெற்ற ஆசிரியன். அவனுக்கு வயது இருபத்தியோன்று . இளமையின் துடிப்பும் கவர்ச்சியும் அவனிடம் தெரிந்தது. கண்டி இராச்சியத்தை ஒரு காலத்தில் ஆண்ட நாயக்கர் வம்சத்தை செர்ந்தவன். கண்டி தலதா மாளிகைக்கு அருகே உள்ள மலபார் வீதியில் அமைந்த அவனின் பூர்வீகவீட்டில் பிறந்து, ரினிட்டி (Trinity) கல்லூரியில் படித்தவன். பௌத்தன். கண்டியில் உள்ள அரச கல்லூரி ஒன்றில் ஆசிரியராக இருந்து அரசியல் காரணத்தால் காட்டுப் பகுதியில் உள்ள “தம்பண்ணா” கிராமப் பாடசாலைக்கு மாற்றலாகி வந்தவன்
அவன் வகுப்பில் உள்ள பத்து மாணவ மாணவிகளுள் களுவம்மாவும் ஒருத்தி . அவளின் கவர்ச்சியும் பார்வையும் அருணாவை முதல் நாளே ஈர்த்து விட்டது
மாணவ ,மாணவிகள் தங்களை ஒவ்வொருவராய் அறிமுகப் படுத்தினார்கள்.
களுவம்மாவின் முறை வந்த அவள் பேசாமல் கண்வெடாமல் ஆசிரியரைப் பார்த்த படியே சில வினாடிகள் இருந்தாள்.
“என்ன நீ என் உன்னை அறிமுகப் படுத்தாமல் என்னை பார்த்த படியே இருக்கிறாய் என்னில் அப்படி என்ன இருக்கு ”? அருணா கேட்டான்
“இல்லை குருத்துமா (Teacher) நீங்கள் போட்டிருக்கும் கருப்பு நிற அங்கவஸ்திரய (shirt) உங்கள் சிவந்த மேனிக்கு பொருத்தமாக இருப்பதைப் பார்த்து இரசித்து கொண்டு இருந்தேன். அதனால் பதில் சொல்ல மறந்து விட்டேன்”
“சரி சரி என்னை இரசித்தது பொதும் முதலில் உன்னை அறிமுகப் படுத்து.”
“ என் பெயர் களுவம்மா . வயது பதினாறு. இந்தக் கிராமத்து தலைவர் திசஹாமி அத்தோவின் ஒரே மகள். என் குலம் பூர்வீக இனமான வேடவர் குலம் . என் தெய்வங்கள் வள்ளியும் முருகனும்.
“நல்ல வித்தியாசமன அறிமுகம். உன் வீடு இந்தக் கிராமத்திலா”?
”ஆமாம் ஒரு குடிசை”
”எந்தப் பாடம் உனக்கு பிடிக்கும்:”?
”எங்கள் இனம் பற்றிய வரலாறு. இயற்கை, சுற்றாடல். அரசியல் :”
“நல்லது. சிங்களத்தை விட வேறு எந்த பாஷை உனக்குத் தெரியும்”
“ தமிழ் ஒரளவுக்குத் தெரியும்”:
“ அப்படியா கணிதமும் தெரிந்து இருக்க வேண்டும்”
அந்த முதல் சந்திப்பில் இருந்தே களுவம்மா அருணாவும் மனதில் இடம் பிடித்து விட்டாள்.. அவனும் கண்டிப் பெண்களின் அழகிலும் பார்க்க களுவம்மாவின் அழகில் எதோ ஒரு கவர்ச்சியைக் கண்டு அருணா சற்று நிலை குலைந்து போனான் அதே போல் களுவம்மாவின் பார்வைக்குள் அருணா சிக்கி விட்டான் என்றே சொல்லலாம் . அவனிடம் அவள் எதோ தன் கிராம ஆடவர்களில் இல்லாத ஒன்றைக் கண்டாள்.
பாடசாலை முடிந்ததும் இருவரும் பாடம் தொடர்பான விசயங்களை பற்றி சிறிது நேரம் பேசிக் கொள்வார்கள். தினமும் களுவம்மாவுக்கு பிடித்த கருப்பு சட்டையை அருணா அணிந்து வருவான் . காலப் போக்கில் அவர்களிடையே உள்ள மாணவி ஆசிரியர் உறவு போய் காதலர்கள் உறவாக மலர்ந்தது.
ஒரு நாள் களுவம்மா தேனும் திணை மாவும் பாலைப் பழமும் அவனுக்கு வீட்டில் இருந்து கொண்டு வந்து கொடுத்தாள். அவன் இரசித்து உண்டான். இன்னொரு நாள் தேனில் ஊற வைத்து பதப் படுத்தப் பட்ட மான் இறச்சியும் மரவள்ளிக் கிழக்கு சுட்டுக் கொன்டு வந்து கொடுத்தாள். தான் மாமிசம் உண்பதில்லை என்று சொல்லி மான் இறச்சியயை உண்ண மறுத்து விட்டான் அருனா . அதன் காரணத்தை அவளுக்கு விளக்கினான்”
“நீங்கள் மாமிசம் சாப்பிடாவிட்டால் நானும் இனி சாப்பிட மாட்டேன்:” என்றாள் அவள். .
“அது சரி மான் வேட்டை ஆடுவது உன் கிராமவாசிகளின் தொழிலா?

“என் தந்தையும், சித்தப்பாவும் அம்பும் வில்லும் பாவித்து மான் வேட்டை ஆடுவதில் வல்லவர்கள் அது தங்கள் இனத்தின் பூர்வீக தொழில் அந்தக் குணத்தில் இருந்து எனது கிராமவாசிகளை மாற்ற முடியாது, கிராமத்தை சுற்றி ஒரே காடு. பெரிய மதுறு ஓயாக்குளம் உண்டு யானை, சிறுத்தை , கரடி, நரி. எருமை போன்ற வனவிலங்குகளும் பல இன பறவைகளும் உண்டு அவை எங்கள் கிராமத்தின் கனி வளம். காட்டுப் பழங்கள்.. விதம் விதமான பூக்கள ஏராளம். மூலிகைகளை ஏராளம். அதை வைத்து வைத்தியம் செய்ய, வேலுஹாமி என்ற ஒரு வேடவர் இருக்கிறார்;. அவர் எங்கள் கிராமத்தில் குடிசையில் உள்ள முருகன் கோவில் கப்புராலாவும் அவரே . அவர முகம் பார்த்து சொல்லும் வாக்கு பலிக்கும்” என்றாள் களுவம்மா.
“அவர் உனக்கு என்ன சொன்னார்.:”
“நான் பிற ஊர் வாசியோடு இக் கிராமதை விட்டு ஓடி போய் விடுவேனாம் என்றும் வருங்கலத்தில் நான் அரசியல்வாதி ஆகலாம் என்றும் சொன்னார்:”
“சரி களுவ்ம்மா எங்கள் காதல் விவகாரம் உன் பெற்றோருக்குத் தெரியுமா”?
மற்ற மாணவிகள் அவர்களுக்கு சொல்லி இருப்பார்கள். அனால் அவர்கள் திட்டம் வேறு பக்கத்து குடாவில்லு கிராமத்து வேடவ தலைவர் மகனுக்கு என்னை கொடுக்கப் போவதாக பேசியதைக் கேட்டேன்.”
”உனக்கு உன் இனத்தில் முடிக்க விருப்பமா.”?:
“அதெப்படி முடியும் என் சினேகிதிகள் இருவரில் ஒருவர் முஸ்லீமையும் ஒருவர் தமிழனையும் மட்டகளப்பிலும், ஏறாவூரிலும் மணம் முடித்து இருகிறார்களே. எனக்கு பிடித்த ஒருவரைத் தான் எங்கள் குலதெய்வம் வள்ளியைப் போல் முடிப்பேன்:”
”யார் அவர் உனக்கு பிடித்தவர் களுவம்மா”?

” வேறு யார் நீங்கள் தான் அருணா ”:
அருணா அவளைக் கட்டி அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
“ அதென்ன உங்கள் கையில் ஒரு பெட்டி அருணா “?
:” நான் கண்டிக்கு போய் வந்தபோது எங்கள் காதல் நினைவாக உன் அழகுக்கு பொருத்தமாக வெள்ளை நிற வளையல்களும் . முத்து மாலையும் என் பரிசாக வாங்கி வந்திருக்கிறேன்,போட்து உன் அழகை எனக்கு காட்டு: பரிசை அவளிடம் கொடுத்தான்

”நன்றி அருணா , என்னிடம் விலையுயர்ந்த பரிசு கொடுக்கப் பணம் இல்லை உங்களுக்கு என் பரிசாக செந்தாமரை மொட்டுகள் கொண்டு வந்திருக்கிறன்” என்றாள் களுவம்மா .
தூரத்தில் குயில் கூவும் சத்தம் கேட்டது.
****

எழுதியவர் : பொன் குலேந்திரன் -கனடா (22-Feb-18, 8:04 am)
பார்வை : 211

மேலே