இயற்கை

பாயும் புலி
பார்ப்பதற்கு அழகு
அரிமாவின் நடையும்
அதன் பிடரியும் கொள்ளை அழகு
வேங்கைப்புலியின் ஓட்டம்
அப்பப்பா எத்தனை அழகு
படமெடுத்தாடும் நாகம்
மதி மயக்கும் அழகு
ஆயின் இவை அத்தனையும்
மனிதர் நாம் மறைந்திருந்த
ரசிக்க முடியும் அழகு
நேருக்கு நேர் பார்க்க நினைப்பின்
சோகமாகிவிடும் வாழ்வு

மாமரத்தில் பஞ்சவர்ண
கிளிகள் கூட்டம் -கொஞ்சி கொஞ்சி
மாங்கனிகளை உண்ணும் அழகு
மழைமேகம் வருகையில் மகிழ்ந்து
தோகைவிரித்தாடும் மயில்கள் கூட்டம்
நடனம் புரியாதவர்க்கும் நடனம்
பயில ஆசைத்தரும் ஓர் அழகு
மரக்கிளையில் அணிலொன்று
பழக்கொட்டையின் மீது சிறு வாய் வைத்து
கொத்தி தின்ன பார்க்கும் அழகே அழகு
பார்க்க எழில் இல்லை ஆனால் அதன்
கூவும் ஒலி இசையோ ஒலிக்கே ஓர் அழகு
சோலைக்குயில் கூவும் இசைதான்
கானம் போர்த்த மலைகளிடையே
தாவித்தாவி நடமாடி வரும்
அருவிமகள் எழிலோ காண கண்கொளாக்காட்சி
ஆர்க்கும் கடல் அலை ஓசை ஓர்
பார்த்து கேட்டு ரசிக்கும் இயற்கை அழகு
இவை அனைத்தும் இன்னும் எத்தனையோ
இயற்கை அழகுகள் நேரில் பார்த்து
ரசித்து மகிழ்வைக்கும் அழகு

இப்படி காணாமல் கண்டும் , கண்டும்
களிக்கவைக்கும் எழில் மிகும் வினோதமே
இயற்கை , இயற்கையுடன் ஒன்றிவிட்டால்
மனதிற்கு வேறு சுகம் என்ன வேண்டும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Feb-18, 8:45 am)
Tanglish : iyarkai
பார்வை : 396

மேலே