முற்பகல் செய்யின்

முதல்வரின் வருகைக்காய்
நிறுத்தப்பட்ட போக்குவரத்து

பல மணி நேரமாய்
நொந்து போய் காத்திருந்தார்
வாகனதிற்குள்
முன்னாள் முதல்வர்


இவன் சொகுசா போறதுக்கு
நாங்க வெயில்ல நின்னு
சாகனும் என்ற படி
ஆபாசமாய் திட்ட

அறைந்தது போல் இருந்தது
முன்னால் முதல்வருக்கு

எழுதியவர் : ந.சத்யா (22-Feb-18, 11:52 am)
Tanglish : murpakal seiyin
பார்வை : 87

மேலே