காதல் பயணம்

மாலை கதிரவன்
மலையில் பதுங்க!

மஞ்சள் நிலவது
குளிரை உமிழ!

கோவில் மணி
எல்லாம் குலுங்கி
சிரிக்க!

சாலை விளக்குகள்
மின்மினி போல
கண் சிமிட்டும்
வேளையில்!

கானபறவை போல
சைக்கிளில் பாடிக்கொண்டு
வீடு நோக்கி செல்லும்
உன் பயணத்தில் !

வான்மேகங்கள்
மனசுக்குள் காதல்
மழை தூவ!

காதலன் நான்
காவலனாய் உன்னை
பின் தொடர்வேன்!

உன் இரு இதழ்கள்
என்னை போகச்சொன்னாலும்!
கரு விழிகள்,
என் காலடி தேடியது!

என் பயணமானது
உன் கனவனாகும் தருனத்தில் முற்றுப்பெறும்!

எழுதியவர் : சுதாவி (23-Feb-18, 3:58 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : kaadhal payanam
பார்வை : 248

மேலே