கடந்த தூரம் ,அடைந்த இடம்

வளர வளர கொண்டாட்டம்
வாழ்க்கை எங்கும் களியாட்டம்
எத்தனோயோ சேர்த்துவிட்டோம்
வயதை மட்டும் தொலைத்துவிட்டோம்
பணத்தை சேர்க்க பொருளை சேர்க்க
இரண்டும் அன்றில் புகழை சேர்க்க
வேகம் கூட்டி ஓட்டம் போட்டோம்
பயண தூரம் கடந்துவிட ,
இருந்தும் இடையில் பிறர் மரணம் பார்த்து
கொஞ்சம் மவுனம் காத்தோம் ,.
ஆனால் வேகம் மட்டும் குறையவில்லை
இலக்கு என்று ஏதோ சொன்னோம்.
தூரம் மட்டும் குறையவில்லை,.
ஏனோ காலம் மட்டும் முடிந்து போக
உயிர்மட்டும் பிரிந்து போக ,
உடல் இங்கு மடிந்து போக,
கடந்த தூரம் மரணம்
வேகம் அடைந்த இடம் மரணம்.

எழுதியவர் : (24-Feb-18, 8:45 pm)
சேர்த்தது : சகி
பார்வை : 54

மேலே