மனதின் நாற்றம்

மனதின் நாற்றம்

அடிபணிந்தவனை அடித்துக் கொல்வது
இதயமற்ற ஈனப்பிறப்பின் சின்னம்

மண்டியிட்டவனை மடிய செய்வது
மிருக மனதின் உச்சம்

எதிர்ப்புக் காட்டாதவனை துன்புறுத்திக் கொல்வது
வக்கிர மனதின் வெளிபாடு

எளியவனை கொல்வது
நோயுற்ற மனதின் முற்றிய நிலை

வயிற்றுக்காக வாடியவனை
அடித்துக் கொன்று - அதை
தன்னுடன் சேர்த்து படமெடுத்து பதிவிடும் மனம்
அழுகி சீழ்பிடித்து நாற்றமெடுக்கும் மனதின் அடையாளம்

இத்தகைய சமுதாய பிம்பத்தில்தான்
என்முகமும் எங்கேயோ ஒரு மூலையில்
மறைந்துள்ளதை எண்ணும்போது
இதயம் குற்ற உணர்வில் கூனி குறுகி
குருதி பெருக்குகிறது

எழுதியவர் : சூரியகாந்தி (25-Feb-18, 1:10 am)
Tanglish : manathin natram
பார்வை : 106

மேலே