என்னை சுட்டது -கங்கைமணி

முண்டா பனியனோடும்,
மடித்துக் கட்டிய வேஷ்டியோடும்,
அலைந்து திரிந்து,கடைத்தெருவில்
காய்கறிகள் வாங்கி.

தோலில் ஒரு குடம் ,
கையில் மறு குடம் ,
வெறுங்காலில் தார் சாலையில்
நீரெடுக்க நடந்து

அடுப்படியில் திரிந்து
அனலோடு உழன்று ,அன்றாடம்-
விதவிதமாய் சமைத்து.

வேலையெல்லாம் முடித்து
எல்லோரும் உண்டபின்
ஓய்ந்து அமர்ந்து.,
முதல் நாள் சாதத்தை,தட்டில் இட்டு
சாப்பிடும் பொழுது...,

"சமையல்காரய்யா" என்ற
முதலாளியின் சத்தம் கேட்டு ,
எழுந்து ஓடும் என் அப்பாவின்
உழைப்பில் கிடைத்த பணத்தில்
வாங்கிய "சிகரெட்"

ஓர் நாள்..,!
என்னைப்பார்த்து...,
காரி உமிழ்ந்து,
கொதித்து எரிந்து,
கனன்று சிவந்து.,
என் விரலை சுட்டது ,அன்றோடு
என் உறவையும் விட்டது
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (26-Feb-18, 11:15 pm)
பார்வை : 122

மேலே