ஊழ்வினைப் பயன்

கிரஹணம் பிடித்த
நாட்களைக் கழிக்கத்
துணிவின்றி
யாதொன்றும் அறியாமல்
செய்த பாவங்கள்
புடை சூழ
ரணமாகிய மனத்துடன்
எத்துணை தூரம்
இந்த பயணம்..?
கோடி விந்தில்
எட்டி பிடித்த என் வெற்றி
இந்த வலி சூழ் வாழ்வுக்கா..?
எந்தையிட்ட வித்தில்
கருவுறாமல்
என் தாய் குருதி கலந்து
மோட்சம் பெறாமல்
ஊழ்வினைத் துரத்த
சதைப் பிண்டமாய்
மண் தொட்டதென்
துர்ப்பாக்கியமே...!