சிரியா நீ சிரிப்பை மறந்ததேனோ

"சிரி", என்று உன் பெயரில்
இருந்தும் நீ சிரிப்பை
என்று மறந்தாயோ 'சிரியா'
ஆட்சி பிடிப்பு என்ற
தீராத தாகத்தால் , சிலர்
ரத்த வெறி கொண்டு கோர
தாண்டவம் ஆட , நீ உந்தன்
ஒன்றுமறியா மக்களை
ஆயிரம் கணக்கில் இழந்துகொண்டு
இருக்கின்றாய் ..பாமரர்,பெண்டிர்,முதியோர்
பச்சிளம் பாலகர் என்று ஆயிரம் ஆயிரம்
மக்கள் தினம் தினம் இன்னலக்குளாகி
இறக்கின்றனரே, என்று நிற்கும் இந்த
'காட்டுமிராண்டிகள் யுத்தம்' , என்று
மக்கள் ஆட்சியில் நீ உயிர்பெற்றுஎழுந்து
'சிரியாவாய்' சிரிக்கப்போகின்றாய்
உன் துயரெலாம் நீங்கி அச்சம் போய்
சுதந்திர 'சிரியாவாய்'

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Feb-18, 8:02 am)
பார்வை : 155

மேலே