காதல்- அன்று, இன்று

அன்று காதலர்கள்
உள்ள கிளர்ச்சிகள்
மடல்கள் கொண்டு
பரிமாறப்பட்ட, இடையில்
வந்தது, தொலைப்பேச்சி
அதில் பேசி வளர்ந்தது
பலர் காதல் .....இவ்வளவு என்
சிலர் டூயட் 'ம் இசைத்தனர்
பேச்சின் இடையில் தொலைப்பேசியில் ~!
இன்றோ, காலம் நம்மை எங்கோ
இழுத்து செல்லுகின்றது
அவசரமான உலகத்தில்
காதலிக்க நேரம் இல்லை
ஆனால் அது தேடி வருகிறது
கைப்பேசி, 'இணைய தளம்'
முகநூல் என்று காற்றினும்
துரித வேகத்தில் 'விஞான காதல்'
நிதானத்தில் என்றும் ஓர் அழகுண்டு
'அன்றைய காதலிலும் தான்'
நேரில் பார்த்து, தெரிந்து
பின்னர் கடிதத்தில்
இதயங்கள் உறவாட
பரிமளித்த அன்றைய காதல்
கற்கண்டும், குங்குமப்பூவும் இட்டு
கொதித்திறக்கிய பால்போல்
ருசித்தந்து, மணமும் தந்தது
இன்றைய அவசர உலகின் காதல்
அவசரமாய் வந்து அவசரமாய்
மறைகிறதே .....இன்னும் என்ன சொல்ல !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Feb-18, 9:00 am)
பார்வை : 79

மேலே