உனக்கும் எனக்கும் என்னவென்று தெரியாமலே

உனக்கும் எனக்கும்
என்னவென்று தெரியாமலே
உன்னோடு பேசிட
வேண்டுமென நினைக்கிறேன்
உன்னோடு மட்டும்
பேசிட துடிக்கிறேன்

உனக்கும் எனக்கும்
என்னவென்று தெரியாமலே
உன்னோடு சிலிர்த்திட
நினைக்கிறேன்

உனக்கும் எனக்கும்
என்னவென்று தெரியாமலே
உன்னிடம் சிணுங்கிட
நினைக்கிறது ஆசைகள்

உனக்கும் எனக்கும்
என்னவென்று தெரியாமலே
உன்னிடம் என்னை
இழந்து நிற்கிறேன்

உனக்கும் எனக்கும்
என்னவென்று தெரியாமலே
ஏனோ உன்னிடம்
மயங்கி நிற்கிறேன்

உனக்கும் எனக்கும்
என்னவென்று தெரியாமலே
ஏனோ தன்னிலை
மறந்து நிற்கிறேன்

உனக்கும் எனக்கும்
என்னவென்று தெரியாமலே
உன்னை எனக்குள்
ஊற்றி போகிறது
காதலின் மாயம்


உனக்கும் எனக்கும்
என்னவென்று தெரியாமலே
என்னிலிருந்து பிரிந்து
உன்னைத் தேடி
ஒட்டிக்கொள்கிறது உயிர்

உனக்கும் எனக்கும்
என்னவென்று தெரியாமலே
என்னனென்னவோ பேசிக்
கொள்கிறேன் எனக்குள்

உனக்கும் எனக்கும்
என்னவென்று தெரியாமலே
உன்னை என்னவளாக
எண்ண தொடங்குகிறேன்

உனக்கும் எனக்கும்
என்னவென்று தெரியாமலே
உனக்காகவே என
வாழத் தொடங்குகிறேன்

எழுதியவர் : யாழினி வளன் (28-Feb-18, 10:35 am)
பார்வை : 214

மேலே