கனவில் வியர்த்து

இப்பொழுதெல்லாம்
நிறைய கனவுகள்...
வருகின்றன நிறைய.
தேசம், போர்வீரர்
புயல் துளைக்கும் கிராமம்
ஓவியக்குறியீடுகள்
ரோமப்படையெடுப்பு
குதிரைகள்,ஆவிகள்...
ஞாபகங்களின் லாபங்கள்
என்ன என்பது
எனக்கு தேவையற்றது,
எனினும்
நிகழ்காலம் மறக்கிறேன்.
அதுபோதும் எனக்கு...

எழுதியவர் : ஸ்பரிசன் (28-Feb-18, 8:56 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : kanavil viyarthu
பார்வை : 1030

மேலே