நட்பில் நீயும் நானும் ..
உனக்கான தேடலை என்னுள் நான் தேடையில்
என்னையும் அறியாமல் எட்டி பார்க்கிறது உன் மீதான அக்கறை ....
நம் தினசரி சண்டையில் முறித்து கொள்ள நினைக்கும் நம் உறவின் பாலம் இன்று வரை ஏனோ உறுதியாக தான் இருக்கிறது ....
என் தனிமை நேரங்களில் என்னையும் அறியாமல் இதழ் விரிக்க வைக்கிறது எனக்காக அனுப்ப பட்ட உன் செல்ல கோபங்களும் சீரியஸ் சண்டைகளும் ..விசாரிப்புகள் மட்டுமே சுகம் தருமென யார் சொன்னது ????
உன்னுடனான விவாதங்கள் கூட சுகம் தான் எனக்கு ..எப்பொழுதும் எட்டி உதைக்கும் குழந்தையாய் நானும் ..எல்லா சுமைகளையும் சுகமாய் ஏற்று கொள்ளும் தாயாய் நானும் இந்த நட்பெனும் உறவில் .....:):):)