சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் 46 அநுராக மு லேநி மநஸுந – ஸரஸ்வதி

பொருளுரை:

பக்தியில்லாத (மாந்தரின்) மனத்தில் நல்லறிவு பிறக்காது;

மகான்களாகிய தத்துவ ஞானிகள் இதை நன்கறிவர்;

வகை வகையாக நிதானமாக உண்ணப் புகுபவர்களுக்குத் திருப்தி ஏற்படுவதைப் போல (பகவானின் கல்யாண குணங்களைத் தியானித்து) ஸகுண உபாசனை செய்பவர்களுக்கே சுகம் கிடைக்கும்.

பாடல்:

பல்லவி:

அநுராக மு லேநி மநஸுந
ஸுஜ்ஞாநமு ராது (அநுராக)

அநுபல்லவி:

க நுலைந யந்தர் ஜ்ஞாநுல
கெறுகே கா நி (அநுராக)

சரணம்:

வக வக கா பு ஜியிஞ்சே
வாரிகி த்ருப்தௌரீதி
ஸகு ண த் யாநமுபைநி
ஸௌக் யமு த்யாக ராஜநுத (அநுராக)

பொதிகை தொலைக்காட்சியில் திருமதி.ஜெயந்தி குமரேஷ் வீணையில் வாசிக்கக் கேட்டேன்.

யு ட்யூபில் Anuraagamuleni - Saraswathi – Thyagaraja என்று பதிந்து ப்ரியா சகோதரிகள் பாடுவதைக் கேட்கலாம்.

யு ட்யூபில் Thyagaraja Kriti-Anuragamule -Sarasvati-Rupakam- KV நாராயஸ்வாமி என்று பதிந்து KV.நாராயணசாமி பாடுவதைக் கேட்கலாம்.

யு ட்யூபில் Anuragamuleni என்று பதிந்து Dr.M.பாலமுரளி கிருஷ்ணா பாடுவதைக் கேட்கலாம்.

யு ட்யூபில் MMI_Anuragamule_Saraswathi_.wmv என்று பதிந்து மதுரை மணி ஐயர் பாடுவதைக் கேட்கலாம்.

யு ட்யூபில் E Gayatri-Veenai-Anuragamule-Saraswati-Rupakam-Thyagaraja என்று பதிந்து E.காயத்ரி வீணை வாசிப்பதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Mar-18, 3:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 54

மேலே