யுத்தம் தவிர்

#A_story_from_Syria
பிரசவ வலி கொண்ட என் மனைவி பிள்ளை பெறப்போகிறாள் எனும் செய்தி கேட்டு அடங்கா மகிழ்வு கொண்டேன். அப்பிஞ்சு மழலையின், தேன்குரல் கேட்க துள்ளி குதித்து ஓடும் ஒரு மானினைப்போல் சாலையில் ஓடினேன். மின்னல் வேகத்தில் எனை விஞ்சி இரு இரும்பு பறவைகள் பறந்தன, அது உதிர்த்த இரண்டு நெருப்புப்பந்துகள் கீழே விழ, பெருத்த ஒலி கொண்டு இரு வெடிகள் வெடித்த வெடிப்பில் காற்றில் ஒரு துகளென வீசி எரியப்பட்டேன். சிந்தனை தெளிந்து எழுந்து நிற்கையில், அடங்காத புழதி படலம் எனை இருள் என மறைத்தது. அப்புழுதியின் உள்ளே என் மனைவி இருந்த கட்டிடம் ஒரு மணல் குவியல் போல் இருந்தது. சரிந்து கிடந்த அந்த குவியலை ஆழ தோண்டி தீயினில் வெந்த ஒரு சதையினை எடுத்து என் கையில் கொடுத்தான் ஒருவன், "இதுதான் உன் பிள்ளை" என்று. என் வலியை கூறவே ஒரு மொழி இல்லை, நெஞ்சில் உயிர் இல்லை. இந்தப்பிஞ்சு குழந்தையின் இனிமையான அழுகுரல் கேட்க ஆசையாய் ஓடிவந்தேன். இப்போது என் செய்வது என அறியாமல் ஓ... வென கதறி அழுகிறேன். ஏ இறையே இக்குழந்தையின் ஒலிக்காத குரலின் வேதனை உனக்குக்கேட்கிறதா, கருவறை இருள் நீக்கி ஒளியை காண இருந்த என் குழந்தையை முழு இருளில் மூழ்கடித்து விட்டாயே. ஏ போராலியே இனி நீ அழிப்பதற்கு எதுவும் இங்கில்லை. நீ அழிக்க நினைத்ததை எல்லாம் உன் எதிரியே அழித்து விட்டான். ஏ அரசே, எங்களை காப்பேன் என உறுதி கொடுத்த ஏகாதிபத்திய நாடுகள் இனி நீ காப்பதற்கு இங்கு எதுவும் இல்லை. நீ காக்க வேண்டியதை எல்லாம் நீயே அழித்து விட்டாய். உங்கள் இருவரிடமும் நான் மன்றாடி கேட்பது ஒன்றே இங்கே அழிப்பதற்கும் எதுவும் இல்லை, காப்பதற்கும் எதுவும் இல்லை, எஞ்சி நிற்பது பினங்கள் மட்டுமே அதை புதைக்கும் வரையாவது போரை நிறுத்து.

எழுதியவர் : Krishnamoorthi (2-Mar-18, 6:05 pm)
சேர்த்தது : Krishnamoorthi
Tanglish : yutham TAVIR
பார்வை : 87

மேலே