நீ

இளஞ்சூரியனின்
கிரணங்களை தாங்கிய
மல்லிகைக்கொடி நீ

தென்றல் காற்றின்
முத்தங்களை அப்பிக்கொண்ட
ரோஜாவனம் நீ

ஆம்பலின் மொட்டுக்கள்
பூக்கும் ஓசையும்
அதில் பிறந்த புதுவாசமும் நீ

இரவின் மடியில்
மௌனத்தை போர்த்தி
உறங்கும் பனித்துளிகளின்
ஆலாபனை நீ

கலில் ஜிப்ரானின்
கற்பனையில் தூரிகையில்லாமல்
வரைந்த நவீன ஓவிய கவிதை நீ

கவிக்கோவின்
ஈடு இணையற்ற
கற்பனையில் மலர்ந்த
கஜல் கவிதை நீ...

இந்த ஞாலத்தில்
தோன்றிய பழமையும்
நாளை தோன்றவிருக்கும் புதுமையும் நீ...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (3-Mar-18, 9:13 am)
Tanglish : nee
பார்வை : 1058

மேலே