மூடப்பட்டதும் திறக்கப்பட்டதும்
மூடப் பட்ட ஆலயக் கதவில் சிற்பங்கள் அழகுதான்
ஆயினும்
மூடிய சிற்பக்கதவு திறந்தால்தான் ஆலயம் அழகு
மூடிய இதழ்களில் புன்னகை அழகுதான்
மூடிக்கிடக்கும் நெஞ்சம் திறந்ததால்தான் காதலுக்கு அழகு !
மூடிக்கிடக்கும் வானம் பூமிக்கு குளர்ச்சிதான்
முகில் பொழிந்தால்தான் பூமிக்கு உண்மைக் குளிர்ச்சி !
மூடிய வாசலில் இரந்தவனுக்கு ஏமாற்றம்
வாடிய வயிற்றின் பசிக்கு அரசுகள் தந்திடாதோ உணவுப் பரிசு ???!!!!
குறிப்பு :தமிழில் ர கர ற கர வேற்றுமைகள் மிகுந்த பொருள் வித்தியாசம் தரும் .
இறந்தவன் --செத்தவன், மடிந்தவன் .
இரந்தவன் ---கையேந்தி பிச்சை எடுப்பவன் .