மரம், காற்று

எதையோ சொல்ல வந்ததோ?
முளைத்தது மரம் –
வளர்ந்த பின்னே பேசுவதில்லை
தன் வேலையைச் செய்கிறது
நிகழ்ந்த நன்மை போல அது நிமிர்ந்து நின்றது

நாம் மரத்தை பார்கிறோம்
நம்மை நாம் பார்த்துக் கொள்வதில்லை –

காற்று வந்து மரத்தை ஸ்பரிசித்தது
மரம் தன் ரகசியத்தை கூறிவிட்டது
அந்த காற்று தான் நம் எல்லோர் மீதும் வீசுது

ஆயினும் தெரியவேண்டியது நமக்கு தெரிவதில்லை
நம்மில் நாம் சரியாக இயங்குவதில்லை –

மரத்துக்கும், காற்றுக்கும் லட்சிய்ங்கள் கிடையாது
லட்சணங்கள் தான் இருக்கும்
மரத்துக்கும், காற்றுக்கும் வரைமுறைகள் கிடயாது
விளவுகள் தான் இருக்கும்

மொழிகளுக்கு எட்டாத கவித்துவம் உண்டு
நாம் அதை புரிந்துகொள்ள வேண்டும்
நாம் அதை சுவைத்துவிட வேண்டும்

எழுதியவர் : ரோச்சிஷ்மான் (4-Mar-18, 2:28 pm)
சேர்த்தது : ரோச்சிஷ்மான்
பார்வை : 641

மேலே