காதல் முத்திரை💕

ராத்திரியில் நித்திரை யாத்திரை போனது உனைத் தேடி உன் இதழில் காதல் முத்திரை பதிக்க💕
சித்திரமே உன் சிற்றிடை அசைவில்
எனை வெற்றுடல் ஆக்கி என் உயிர்
களவாடி விட்டாய் என் உயிரே💕
நித்தமும் செத்து தவிப்பது எனக்கு
சுத்தமாய் பிடிக்கவில்லை,💕
மொத்தமாய் தந்துவிடு உன் அன்பை
சித்தமாய் காத்திருப்பேன் பித்தம்
பிடித்தவனாய்💕முத்தமாய் அது
கிடைத்தால் என் அன்பே
சித்திரையின் கத்திரி வெயிலிலும்
உன் நினைவில் குளுகுளு வென ஏகாந்தமாய் திரிந்திடுவேன்💕

எழுதியவர் : பாலமுருகன்பாபு (5-Mar-18, 12:08 pm)
சேர்த்தது : BABUSHOBHA
பார்வை : 168

மேலே