சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் 48 – கு ருலேக யெடுவண்டி – கௌ ரீமநோஹரி

பொருளுரை:

தீவிரமான (காமம் முதலிய) மனப் பிணிகளென்னும் பெருங்காட்டை அழிப்பது ஸத்குருவாகிய ஆசாரியன் உதவியின்றி எத்தகைய குணவானுக்கும் சாத்தியமல்ல.

உடல், மக்கள், செல்வம், மனைவியர், உறவினர் போன்றவை தோன்றி, அவற்றின் மூலம் சிதறும் துக்கத்தில் மனத்தை அண்டவிடாமல் செய்யும் நன்மருந்து தத்துவ போதனையாகும்; அதனைக் கருணையுடன் செய்பவர் தியாகராஜனுக்கு ஆப்தனாகிய ஸத்குரு ஆவார்.

பாடல்:

பல்லவி:

கு ருலேக யெடுவண்டி கு ணிகி தெ லியக போ து (குரு)

அனுபல்லவி:

கறுகை ந ஹ்ருத் ரோக க ஹநமுநு கொ ட்டநு ஸத் (குரு)

சரணம்:

தநுவு ஸுத த ந தா ர தா யாத பா ந்த வுலு
ஜநியிஞ்சி செத ரு ஜாநிலிநி கருணதோ
மநஸு நண்டக 1ஸேயு மந்த நுசு த த்வ போ-
த ந ஜேஸி காபாடு த்யாக ராஜாப்துட கு (குரு)

யு ட்யூபில் O S Thiagarajan 02 GowriManohari Gurulekha Thyagarajar Kriti என்று பதிந்து O.S.தியாகராஜன் பாடுவதைக் கேட்கலாம்.

யு ட்யூபில் Guruleka- గురు లేకయెటువంటి గుణికి తెలియగ పోదు -Gowrimanohari-Tyagaraja- M Balamuralikrishna என்று பதிந்து Dr.M.பாலமுரளி கிருஷ்ணா பாடுவதைக் கேட்கலாம்.

யு ட்யூபில் Jayanthi Kumaresh- Veenai -Guruleka Etuvanti-Gaurimanohari-Jhampa-Thyagaraja என்று பதிந்து ஜெயந்தி குமரேஷ் வீணை வாசிப்பதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Mar-18, 1:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 133

சிறந்த கட்டுரைகள்

மேலே