சிலை உடைக்க நினைப்பதா

சிலை உடைக்க நினைப்பதா!

சாதி உடைத்தெரிந்த சித்தாந்தத்தின்
சிலை உடைக்க நினைப்பதா!
வைக்கம் உடைத்த வைராக்கியத்தின்
சிலை உடைக்க நினைப்பதா!
பெண்ணியம் விதைதிட்ட விதையின்
சிலை உடைக்க நினைப்பதா!
சமூக நீதி கேட்ட சமூகத்தின்
சிலை உடைக்க நினைப்பதா!
அறியாமை உடைத்தெரிந்த பகுத்தறிவு
சிலை உடைக்க நினைப்பதா!
மானம் காத்த மா மானிடத்தின்
சிலை உடைக்க நினைப்பதா!
சீரூகொண்ட சிந்தனையின்
சிலை உடைக்க நினைப்பதா!
குலக்கல்வி கொடுமை பிய்த்தெறிந்த
சிலை உடைக்க நினைப்பதா!
மானம் காக்க கற்பித்த மா கிழவன்
சிலை உடைக்க நினைப்பதா!
சிலை உடைக்க ஒரு நினைப்புத்தானே
சிரமம், கவலை ஏன்?
உடைத்தால், உடைந்தால்
அது வெறும் சிலையல்ல
ஒரு நூற்றாண்டின் கொள்கை வேட்கை
ஒரு மனித இனத்தின் நரம்பில்
வேராய் விளைந்திட்ட உணர்வு,
அந்த அறிவாசனின் சிலையின்
பீடத்தில் பேசுகின்ற கொள்கைதான்.
உடைவது சிலை அல்ல, நாம்தான்.

எழுதியவர் : இராமானுஜம் மேகநாதன் (7-Mar-18, 2:19 pm)
பார்வை : 41

மேலே