மங்கயர் தின வாழ்த்துக்கள்

பெண்ணே! உன்னை பூ என்பார்..
உன்னை பிறை என்பார்,
பெண்ணே! உன்னை துணை என்பார்..
உன்னை தீ என்பார்,
பெண்ணே! உன்னை நீர் என்பார்..
உன்னை நிலம் என்பார்,
போதும் உங்கள் உவமைகள்!
இனி..
வாழ்வோம் எங்கள் உண்மைகளுடன்!

இரட்டை ஜடை வயதில்
தொடங்கிய எங்கள் பயம்..
உங்கள்..
இரட்டை ஆயுள் வரை
தொடர்கிறது!
விமானம் முதல்..
விண்மீன் வரை,
மைதானம் முதல்..
மைல்கல் வரை
உன் வெற்றியை
உணர வைத்தாய்!
மிச்சம் வைக்க
இனி ஒன்றும்மில்லை!

உன் தசைகளை திருத்திக்கொள்!
உன் திசைகளில் நேர்த்திக்கொள்!
உன் உணவில் ரசனைக்கொள்!
உன் உணர்வில் மேன்மைக்கொள்!

உனக்கான ஓர் வாழ்க்ககை
உனக்காக ஓர் புன்னகை..
வாழ்ந்துக் காட்டிடு பெண்ணே!

Hi,
Chella குட்டிஸ்..
Bubbliyana ஆண்டீஸ்..
Cuteana பாட்டீஸ்..அனைவருக்கும்..
மங்கயர் தின வாழ்த்துக்கள்!

மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (8-Mar-18, 7:27 am)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
பார்வை : 212

மேலே