இதயத்தின் இடம்

சூரியனை கண்ட மலர்போல
உன்னை கண்டதும் மகிழ்ச்சியில்
மலருதடி என் மனமும்

மாற்றான் தோற்றத்தில்
கூர்மையான காவலர்களை கொண்டு
குடியிருக்கும் ரோஜா பூவே
உன் முகம் காண - என்
விழிகள் ஏங்குதடி

அழகே நீ என்னை தீண்டவே
பூக்களாய் வரம் எடுத்தேன்
உன் கூந்தலில் குடி ஏற்றுவாய் - என்று

ஆயிரம் பூக்கள் அழகழகழ்
அவதரித்தலும் அவை
எல்லாம் தோற்றுப்போகும்
உன்னை கண்டாலே

நீ சுவாசிக்கும் மூச்சுக்காற்றால்
காற்றுக்கும் காதல் வந்ததடி
மரம் என்னும் மங்கையின்மேல்

இறைவன் செதுக்கி தங்கமுலாம்
பூசிய சிலையே...
அதிசயத்தின் அரசியே....

உன் இதயத்தில் குடி
கொள்ள எனக்கொரு இடம் கொடு.......

எழுதியவர் : (11-Mar-18, 1:55 am)
Tanglish : ithayaththin idam
பார்வை : 60

மேலே