முதுகுப்பிடிப்பும் எலக்கியபிடிப்பும்

பிடிப்புகள் வேறு வேறு
வலி ஒன்றுதான்.
சனிபிடியில்
ஏழரை என்ன
ரெண்ரை என்ன...
எலக்கியப்பபிடிப்பு
சிரமம் ஜாஸ்தி.
வாழ்த்திவிட்டு
நமக்கென வந்தது
என்போர் சுக்ரதிசை
கோமான்கள்...
ஏணிக்கு கோணியில்
கோவணம் கட்டும்
விமர்சன தாதாக்கள்...
4கில் ராகுக்கள்!
க்வாட்டர் இறங்கினால் போதும்
அம்மாசி கவிதைக்கு
கார்ஹே செத்தான்...
பொன்னுசாமி கதைக்கு
போர்ஹே அவுட்...
இந்த ஏலரைகள்
சில்ர அலப்பறைகளே.
இருப்பினும்
படைப்பில் செருகும்
வாஸ்து ஐடியாக்கள்...
பேனா பிடித்தால்
கிலி வருகிறது...
பேனாவை மூடி விட்டேன்.
எனக்கு
முதுகுப்பிடிப்பு போதும்.

எழுதியவர் : ஸ்பரிசன் (11-Mar-18, 12:04 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 97

மேலே