தனிமையின் அருமை

முகம் தெரியா பலர் உடனிருக்கும் போது தெரியுமா
தனிமையின் அருமை
மனதிற்கு நெருங்கிய சிலர் இருந்தும் இல்லாமல் போது தெரியுமா
தனிமையின் அருமை


வாழ்க்கையில் தோர்த்து வெறுத்து போகும் போது புரியுமா
தனிமையின் அருமை
வளமாக வாழ்ந்தும் வெறிச்சோடிய உள்ளத்திற்கு புரியுமா
தனிமையின் அருமை

ஒவ்வொன்றையும் தேடி தேடி நாடும் போது அறிவோமா
தனிமையின் அருமை
அனைத்தும் கிடைத்தும் நிரைவில்லாதபோது அறிவோமா
தனிமையின் அருமை

சில சமயம்
தனியாக வாழ்ந்தால் புரிவதில்லை தனிமையின் அருமை

இருந்தும் இல்லாத
உணர்ந்தும் உணர்வில்லாத
நிரைந்தும் நிரையாத

அந்த கொடும் போராட்டதில் உணர்வோமே

தனிமையின் அருமை

எழுதியவர் : எழில் (11-Mar-18, 2:38 pm)
Tanglish : thanimaiyin arumai
பார்வை : 1820

மேலே