தனி ஒருவன்

மதிகொண்டு
மதில்கள் எழுப்பினான்
மன்னன் ஒருவன்...

பிரம்மாண்ட கோட்டைக்குள்
கம்பீர நாயகனாய்
அமர்ந்தான் சிம்மாசனத்தில்...

எதிர்பாரா வேளையில்
எதிரிகள் தாக்கிடவே
சரிந்தானே அம்மன்னன்...

வீழ்ந்துவிட்டான்
விழிக்கமாட்டான் இனி
என்றென்னும் போதே
எழுந்து நின்றான்
வீரமாய்...

தாக்கியவரை தாக்கவும் இல்லை
தோல்விக்காக துவண்டு விழவும் இல்லை...

மீண்டும் முயற்சித்தான்
கோட்டையை உருவாக்க...

எத்தகைய
தளறாத மனம்
எத்தகைய
நம்பிக்கையான முயற்சி அவனிடத்தில்!

வாழ்க
சிலந்தி ராஜா!

எழுதியவர் : கலா பாரதி (12-Mar-18, 5:36 pm)
Tanglish : thani oruvan
பார்வை : 285

மேலே