சிலதும் பலதும்

அவரு எப்போவும் சொல்லுவாரு
என் நிலைமை என் குழந்தைகளுக்கு வரக்கூடாதுன்னு
ஆனா அவரை பிராந்தி விக்கிறாருன்னு
போலீஸ் புடிச்சுகிட்டு போனப்போ
ஊரே சிரிச்சாங்க
அந்த குழந்தைங்க ரெண்டு பேரையும்
கையயைப்புடிச்சுக்கிட்டே
அவர் சம்சாரம் போலீஸ் ஜீப் பின்னாடி
அழுதுகிட்டே போனாங்க
வெளியே வந்து தூக்குபோட்டு செத்துப்போயிட்டாரு
யாரும் அவரை வாழ விடல
எந்த ஆம்பளை
வீட்டுக்கு போனாலும்
அவங்களுக்கு பேரு கட்டுனாங்க
ஒரு புடி அரிசி பருப்பு கொடுத்தோ
கடனா ரூபா கொடுத்தோ
அவங்களுக்கு
ஆறுதல் சொல்லக்கூடிய அளவுக்கு
அந்த ஊரு
யாரையும் அனுமதிக்கலை
அவங்களும் அதை விரும்பல
திருவிழா நாள் ல கோயில் அன்னதானத்துக்கு கூட
அருகதை இல்லன்னு
ஆக்குனாங்க
பாத்திரத்துல
நிறைய நொய் வாங்கி
அந்த குழந்தைகளுக்கு கொண்டோயி
குடுத்தேன்
தட்டிவிட்டுட்டாங்க
கடவுளே இல்லன்னு
அன்னைக்கு நினைச்சேன்
வாசல்வரை போவேன்
உள்ள போகமாட்டேன்
அந்த குழந்தைங்க வெளிய வருவாங்க
பேசுவாங்க கேப்பேன்
இன்னும் மரியாதை இருக்கு
இன்னைக்கு மூத்த பொண்ணு
ஆல்பம் ல பாடுறா
நீலகிரியே அந்த பொண்ணு பேரை சொல்லுது
கடவுள் இருக்காருன்னு
நம்ப தோணுது

அன்னைக்கு இதை
அந்த ஊரு முடிவு பண்ணிச்சு
ஆனா இன்னைக்கு
இதை இவங்க முடிவு பண்ணாங்க
ஆமா
இன்னும் அவங்களுக்கு
பேச்சுத்துணை நான்தான்
காலைல எனக்கு போன் பண்ணிருந்தா
பேசிட்டு போனை வைக்கிறப்போ
உன் வைராக்கியத்துக்கு
என் வந்தனம் ன்னு சொல்லிட்டு வச்சுட்டேன்

சாப்டியா ன்னு பசிக்கிறவங்களைத்தான் கேக்கணும்
நல்லா இருக்கியா ன்னு
பேச யாருமே இல்லன்னு தனியா உக்காந்து
யோசிக்கிறப்போத்தான் கேக்கணும்
என்னாச்சு
உடம்பை பார்த்துக்கோ ன்னு
முகமும் உடலும்
சோர்ந்து
வாடியிருக்கிறப்போத்தான் கேக்கணும்
ஏன்னா
இந்த விசாரிப்புகளோட அருமை
அந்த நிலையிலிருக்கும்போது மட்டுந்தான்
தெரியும்
ஏனோ நாலு பேரு
நாலு நாளு எங்களை கேட்டாங்க
நாங்களும் கேட்டோம்
நாளாக நாளாக இது அவங்களுக்கே
புடிக்காமே போயிடுச்சு
இத்தனை வருஷமாகியும்
ஏதும் பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னால
நாங்களும்
நீங்களும் தான்
இன்னும் கேட்டுக்கறோம்
இதோட அருமை
நமக்கு மட்டுமே தெரிஞ்சதனாலையா
நமக்கப்புறம்
இந்த கேள்விகளே இல்லாம போயிடும்ல
அவளோட கேள்வி
ம்ம்ம்ம்

தொடங்கியது நான்தானே
இந்த வார்த்தைகள்
உன்னிடமிருந்து உயிர்விட்டுப்போனாலும்
நா எப்போவும் கேப்பேன்
யாரையும் கேப்பேன்,
இந்த கேள்விளின்மேல்
சலிப்பும் கோபமும் அவர்களுக்குத்தானே
யாராகினும்
அவர்களிடம் எனக்கில்லையே

எழுதியவர் : அனுசரன் (13-Mar-18, 1:27 am)
பார்வை : 109

மேலே