என்னவள்

நகை ஏதும் வேண்டாமடி
பெண்ணே உந்தன்
நகு முகத்திற்கு
அதில் உந்தன் புன்னகை
ஒன்றே பொன்கலத்தால்,
செய்த ஆயிரம் ஆயிரம் ,
ஆரங்களை விஞ்சி நிற்க,
கொட்டும் இயற்கை எழிலில்,
உந்தன் முகத்தில்
கன்னங்கள் இரண்டில் ,
நீ சிரிக்க எழிலாய் காட்சி தரும்
குழிகள் இரண்டும் என் மனதை
இழுத்து உந்தன் மனதில்
வைத்து மூடிடும் நாள் வாராதோ
என்று நித்தம் தவமிருக்கிறேனடி
நான் இங்கே உனக்காக


Close (X)

4 (4)
  

மேலே