தீரா ரணமாய் வனம்

வனத்திற்குள் செல்ல ...
தடை விதித்தால் ...
யோக்கியன் மாதிரி பேசாதென்பீர் ...!

தனிமனித சுந்தந்திரம் ...
தடுக்கபடுதென்பீர் ....!

இயற்கை அழகை...
ரசிப்பது குற்றமாயென்பீர்...!

பின் ....
குறுக்கு பாதையை ...
உறவு பாதையாக்கி குடி கொள்வீர் ...!

காசு வாங்குவது குற்றமென கொடிபிடிப்பீர் ...
காசு கொடுப்பது ...குற்றமென்பதை தினம் மறைப்பீர் ...

மரம் உரசி பற்றி எறிந்தாலும் ..
மனிதன் உரசி எரிந்ததென்பீர்....!

வேண்டப்பட்டவன் உரசி இருந்தால் ...
விண்கல் விழுந்து தீ வந்ததென்பீர் ...!

எதை சொல்லி நியாயம் பேச ...
யாரை நம்பி உண்மை காண ...

அரசு கேபிள் கட்டென்றால் ...
மீடியாக்கள் அனைத்தும் ...
அரசுக்கு ...
ஜோடியாட்களாய் ஆகிவிடுகிறது ...

வருமானம் இல்லாமல் ...
வரும்..... மானம் சுடு வானமாய் கடுக்கிறது ...
தன்மானத்தை தாரை வார்த்தால் ...
வெகுமானம் பகுமானமாய் பல் இளிக்கிறது ...

இப்படி இருக்கும் ....
பொய்யான உலகத்தில் ...
மெய்யாக வாழ ...யாரால் தான் முடிகிறது ...!

ஒருவேளை ...
எப்போதாவது....
தனிமனித மெய் சாத்தியமாகுமெனில்...
பொதுநல விடியலும் சாத்தியமாகும்...!

ம கண்ணன்

எழுதியவர் : ம கண்ணன் (13-Mar-18, 6:37 pm)
சேர்த்தது : கண்ணன் ம
பார்வை : 52
மேலே