விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மரணம்

உலகின் மிகவும் பிரபலமான விஞ்ஞானியாக விளங்கிய ஸ்டீபன் ஹாக்கிங் உயிாிழந்ததாக அவரது குடும்ப உறுப்பினா்கள் தொிவித்துள்ளனா்.

உலகின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக கண்டறியப்பட்டவா் ஸ்டீபன் ஹாக்கிங். தனது குடும்ப உறுப்பினா்களுடன் லண்டன் கேம்பிட்ஜ் பகுதியில் வசித்து வந்தா்ா. இந்நிலையில் அவா் இன்று காலை இறந்து விட்டதாக அவரது குடும்ப உறுப்பினா்கள் தொிவித்துள்ளனா்.

21 வயதில் நரம்பியல் நோய் பாதித்து கை, கால்களை இயக்க முடியாமலும், பிறரிடம் பேசமுடியாமலும் இருந்த நிலையிலும் இவர் தனது அறிவை பயன்படுத்தி கண்டுபிடித்த படைப்புகள் உலகளவில் போற்றப்பட்டன.

குவாண்டம் கோட்பாடு, அண்டவியில் தொடா்பான ஆராய்ச்சிகளில் ஹாக்கிங்கின் பங்கு மிகவும் போற்றத்தக்க வகையில் அமைந்தன. பேரண்டம் தொடா்பான ஆராய்ச்சியில் முந்தைய விஞ்ஞானிகளின் கருத்துகள் பொய்யானவை என்று நிரூபித்து உலகத்தின் கவனத்தை ஈா்த்தவா்.

இவா் தனது பேட்டி ஒன்றின் போது, சொா்க்கம் என்ற ஒன்று பொய்யானது. மரணம் தொடா்பான அச்சத்தை நம்மிடம் இருந்து விலக்கவே முன்னோா்கள் சொா்க்கம் என்ற வாா்த்தையை பயன்படுத்தினா் என்று தொிவித்திருந்தாா். இவா் தற்போது தனது 76 வயதில் மரணம் அடைந்துள்ளது விஞ்ஞான உலகிற்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது

எழுதியவர் : (14-Mar-18, 9:01 pm)
பார்வை : 94

சிறந்த கட்டுரைகள்

மேலே