என்னவன் இவன்தான்
நெடியவன் அவன்
உடல் உருவில்
வளமான உள்ளத்தில்
அவன் நெடியவன்
உருண்டு திரண்ட
திண் தோளன் அவன்
விரி மார்பன்
வசீகரன் முகத்தில்
மங்கையரை மயக்கும்
கமலக் கண்ணன் அவன்
நீண்ட மூக்கு
திடமான தாடை
சதைபோர்த்த கன்னங்கள்
துடுப்புகளோ அந்த
என்று நீண்டுயர்ந்த
கைகளிரண்டும் கால்களின்
முட்டிகளையும் தாண்டி
இருக்க இவனல்லவோ
அங்க இலக்கணங்கள் கூறும்
உயர்ந்த மனிதன் என்று
நானறிந்தேன் அவனைக்
கண்டதுமே என்னவன் இவன்தான்
என்று மனதில் அவன் உருவை
இறக்கிவிட்டேன் பூட்டிவிட்டேன்
அவன் என்னவன் எனக்குமட்டும்தான்
என்று நினைத்தபின்னே
வேறென்ன செய்வேன் அவன்
மீது எனக்கு காதல் தலைக்கேற