விடியலுக்கான தேடல்

வினாக்களுள் உழலும் தேடல்கள்
விடையாய் ஓர் விடியல் தேடி..

சூரியன் வருகை விடியல் என்று
தாமரை எண்ணிடும் உலகில்
அல்லியின் அஸ்தமனமும் அதுவே!!

ஒருவரின் சிரிப்பு மற்றறொருவரின்
கண்ணீராகிடும் மானுடம் - இதை
மார்தட்டி சொல்லிடும் விந்தை
அது கேலிக்கை..

எழுதியவர் : மைவிழி (15-Mar-18, 11:37 am)
சேர்த்தது : மைவிழி
பார்வை : 59

மேலே