மிதக்கும் பந்து

காற்றில்
மிதந்து வந்தாயே!

கண்ணாடிச்
சிலையாய் ஒளிர்ந்தாயே!

உன் வட்ட
முகத்தை தொட்டவுடன்
சட்டென மறைந்தாயே!

வெட்கமா நீர்க்குமிழியே??

எழுதியவர் : கலா பாரதி (15-Mar-18, 5:13 pm)
சேர்த்தது : கலா பாரதி
Tanglish : midhakum panthu
பார்வை : 80

மேலே