என்னவள் அழகு

பொய்யில் பிறப்பதுதான்
புலவன் மொழி என்பர் -ஆனால்
பெண்ணே எனை நம்பு
உந்தன் முகத்தை தாமரை
என்றேன் நான் அதில்
பொய் இல்லை இல்லை
ஒருமுறை நிலைக்கண்ணாடியில்
உன் முகத்தைப் பார் நீ
அறிந்துகொள்வாய் நான்
சொல்வது நிஜமா பொய்யா என்று
மான் விழி உந்தன் விழிகள் என்றேன்
இதில் ஏதடி பொய்மை- பெண்ணே
அந்த மானே உன் விழிகள் கண்டு
நீ தானோ பெண்மான் என்று
உன்னை நாடி வரும்
மின்னல் கொடியே என்று நான்
உன்னை அழைத்தேன் -அது
வானில் கொடிமின்னல் நான் பார்த்தபோது
ஆடிவரும் உன் இடையல்லவோ அதில்
நான் கண்டேன்
அன்னமே என்றழைத்தேன் உன்னை
உந்தன் அழகு நடையைக்கண்டு அதில்
ஏதடி பொய்மை நீயே கூறு
கன்னத்தில் நீ முத்தமிட்டாய் அதை நான்
மதுவேந்தும் மலர்சிந்தும் உறவோ என்றேன்
கரிய உந்தன் அடர்க்கூந்தல் கருமேகம் என்றேன்
இதிலும் நான் பொய்யேது கூறினேன் நீயே சொல்வாய்
இளமையில் பொங்கிக்குலுங்கும் உந்தன்
பெண்மையின் எழிலை மறைக்க தடுமாறுதே
நீ எழிலாய்ப் போர்த்திய உன் சீலை என்றேன்
இது பொய்யா மொழி என்பேன் இது பொய்யா

நம்பிடு என்னவளே நம்பிவிடு
புலவனையே பித்தாக்கும் உன் எழில்கள்
இதில் வஞ்ச புகழ்ச்சி ஏதுமில்லையடி நம்பிடு என்னை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Mar-18, 11:02 am)
Tanglish : ennaval alagu
பார்வை : 240
மேலே