இயற்கை

மலருக்கு மணம் கொடுத்தது யாரு?
மலருக்கு நிறம் கொடுத்தது யாரு?
கனிக்கு சுவை கொடுத்தது யாரு?
வளர்வதும்,வாடுவதும், யார் சொன்னாலும் மாறாது,
எதிர் பார்த்து பயன் பார்த்து பலன் கொடுப்பதில்லை,
நாள் பார்த்து நயம் பார்த்து பணி செய்வதில்லை,

வெட்ட வரும் கோடாலிக்கும் உடல் கொடுப்பதும் மரமேயாகும்,
மழை நீரையும், மாசு நீரையும், ஒன்றாய் சுவைப்பது மண்ணேயாகும்,
அண்டவெளியில் அத்தனை மாசையும் சேர்த்தவன் மனிதனேயாகும்.

கொடுத்துக் கெடுப்பது தர்மம் அல்ல,
அன்பை நிறுத்துப் பார்ப்பதும் நியாயம் அல்ல,

உயர்வுக்கு வானமே எல்லை,
தளர்வுக்கு மனசே எல்லை.

எழுதியவர் : arsm1952 (17-Mar-18, 12:44 pm)
சேர்த்தது : arsm1952
Tanglish : iyarkai
பார்வை : 926

மேலே