யாரின் வேலை

அந்தரத்தில் ஆடுகின்ற பம்பரமே
யார்பிடியில் சுழலுகிறாய் மந்திரமே
நந்தவனப் பூக்களுக்கா காத்திருந்தாய்?
நல்லநெய் விளக்கிலா ஒளிகொடுப்பாய்?
மந்தைஆடு போலமக்கள் வந்து குவிகிறார்.
மண்டியிட்டுத் தெண்டனிட்டு வரங்கள் கேட்கிறார்.
சந்தையிலே கிடைக்கநீ கடைச் சரக்கா?
சத்தியங்கள் பொய்த்தனவே என்ன சொல்கிறாய்?

சந்தனத்தின் வாசனையா உன்விருப்பம்?
சடுகுடுவா? கபடியா? உனைப் பிடிக்க?
மந்திரத்தில் பிடிபடுவாய் என்று நினைக்கிறார்!
மறக்காமல் அவரவரை அவர் நினைக்கிறார்.
செந்தூரப் பொட்டிலா உன் அழகு?
திருநீற்றுக் கீற்றிலா உன் உருவம்?
தந்தாயா உன்னருளை வந்த பேர்க்கு
தகிடுதத்தம் ஒழிப்பதுவும் யாரின் வேலை?

எழுதியவர் : கனவுதாசன் (17-Mar-18, 2:23 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 121

மேலே