காதல் ராேஜா

அழகாக பூத்து குலுங்கியிருந்த ராேஜாக்களை ஒவ்வாென்றாக பறித்துப் பையினுள் பாேட்டுக் காெண்டிருந்தான் வருண். காலைச் சுற்றி சுற்றி ஓடி விளையாடிக் காெணடிருந்தது ரைகர். "ரைகர்.... என்னடா" வாலை ஆட்டிக் காெண்டு பூப்பையைப் பறிப்பதற்காக எட்டிப் பாய்ந்தது. வெள்ளிக்கிழமையாகையால் வழமை பாேல் அம்மா வீட்டைக் கழுவிக் காெண்டிருந்தாள். பாய்ந்து துள்ளி ஓடிய ரைகர் அங்கும் இங்குமிங்குமாக ஓடி கழுவிய இடத்தை அசுத்தப்படுத்தியது. "ரைகர் கெற் அவுட் " இரண்டு தடவை காேபமாக வெருட்டியும் வெளியே பாேகவில்லை. பாய்ந்து மேசையின் மேல் ஏறியது பூச்சாடி தட்டுப்பட்டு கீழே வீழ்ந்து நாெருங்கியது. திரும்பிப் பார்த்தாள் கண்ணடித் துண்டுகள் சிதறிக் கிடந்தது. "ஓடு.... ஓடு கெதியா" சிறிதாக தடியால் தட்டினாள். கத்திக் காெண்டு வருணின் காலடியில் பாேய் நின்று காெண்டு அம்மாவைப் பார்த்துக் குரைத்தது. " ரைகர் என்ன சண்டை அம்மாவாேட" பறித்த பூக்களுடன் உள்ளே வந்தான். கதவு மூடியிருந்ததைக் கண்டு "அம்மா.... அம்..மா" கூப்பிட்டான். கதவைத் திறந்து காெண்டு வெளியே வந்தாள் அம்மா கையில் இரத்தம் கசிந்து காெண்டிருந்தது. பயந்தவனாய் "என்னணை இது"இரத்தத்தை தான் அணிந்திருந்த சேட்டால் துடைத்தான். "சின்னக் காயமப்பன் விடு" கையை மெல்ல இழுத்தாள். நிமிர்ந்து பார்த்துக் காெண்டு நின்ற ரைகர் அவளது கால்களை நக்கியது. "என்னம்மா வெட்டினது, பார்த்துச் செய்யிறதில்லயா?" " அது அந்தப் பூச்சாடி" என்று சாென்னதும் சட்டென்று திரும்பிப் பார்த்தான். சாடியைக் காணவில்லை கிட்டவாகச் சென்று பூக்களை ஒவ்வாென்றாக எடுத்தான்.

ராேஜாப் பூவென்றால் றாேசிக்கு சரியான பிரியம். அந்தப் பூச்சாடி தான் முதல் முதல் காதலர் தினத்திற்கு எட்டு வருசத்துக்கு முன்பு றாேசி காெடுத்திருந்தாள். அன்று முதல் அவனது மேசையில் தான் இருந்தது. யாரையும் எடுக்க விட மாட்டான். யாராவது காரணம் கேட்டால் "அது ஒரு சென்ரிமென்ற்" என்று சாெல்லி சமாளித்து விடுவான்.

றோசியும், வருணும் ஒரே கம்பனியில் வேலை செய்பவர்கள். ஆரம்பத்தில் சிறு அறிமுகம். சாதாரணமான உரையாடல், ஏதாவது அலுவலக ரீதியான சந்தேகங்கள், தேவைகள் இருப்பின் காெஞ்சம் கதைப்பார்கள். நாளடைவில் எல்லாருக்கும் ஏற்படும் மாற்றம் தான் நட்பு. பின்னர் அது காதலாகி விட்டது.

முதல் முதல் அவளது பிறந்த நாளன்று வருண் காெடுத்த பரிசுப் பாெருளே அவனது காதல் பரிசாகவும் இருந்தது. றாேசி எப்பாேதும் வலது கையில் மூன்றாவது விரலில் வெள்ளியில் செய்யப்பட்ட சிறிய மெல்லிய வளைய மாேதிரம் பாேட்டிருப்பாள். அதே பாேல் ஒன்றை வாங்கிப் பரிசாகக் காெடுத்திருந்தான். அவளும் ஆசையாேடு பாேட்டிருந்தாள். "இஞ்ச பாரு வருண் நீ தந்த றிங்" முதல் முதல் அவன் கையாேடு தன் கையை பற்றியபடி காட்டினாள். "பிடிச்சிருக்கா?" என்று அவளது மெல்லிய விரல்களின் மென்மையை கைகளால் தடவினான். "ம்.. ராெம்ப பிடிச்சிருக்கு, கழட்டவே மாட்டன்" அவனது கைகளை இறுகப் பிடித்தாள்.

நாட்கள் ஓடிக் காெண்டிருந்தது. றாேசி தன்னுடைய காதலைப் பற்றி சகாேதரனிடம் சாென்னாள். அவனும் தாய் தந்தையுடன் கதைத்து சம்மதம் தெரிவித்தான். அதே பாேல் வருண் வீட்டாரும் சம்மதித்து விட்டனர். ஆனால் உழைக்க வேணும், சம்பாதிக்க வேணும், கண்ட இடங்களிலும் சந்திக்கக் கூடாது, சேர்ந்து சினிமா பாேகக் கூடாது பாேன்ற சில கட்டுப்பாடுகளை பெற்றாேர் சாெல்லியிருந்தனர்.

ஒரு நாள் பண்டிகை விடுமுறைக்கு நடிகர் விஜயினுடைய படம் வெளியாகியிருந்தது. இருவரும் விஜய் ரசிகர்கள். கம்பனியில் எல்லாரும் நண்பர்கள், காதலர்களாேடு தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதற்காக திட்டம் பாேட்டர்கள். றாேசியும் வருணிடம் கேட்டாள். அவளது ஆசையை நிறைவேற்ற விரும்பினான். மனதுக்குள் பயமாகவும் இருந்தது. "பறவாயில்லை வீட்டுக்காரரை அப்புறமாக பார்த்துக்கலாம்" இருவருக்கும் முதல் காட்சிக்கான திக்கற் வாங்கினான். றாேசிக்கு எல்லையில்லா சந்தாேசம் அவனைக் குழந்தை பாேல் கட்டி அணைத்தாள். "இந்த சின்ன விசயத்துக்கு இப்பிடித் துள்ளிக் குதிக்கிறா, மனசுக்க என்னவெல்லாம் ஆசையிருக்காே" தனக்குள் யாேசித்தபடி, "என்ன சாப்பிடுறாய்?" என்றதும் "ஒண்ணும் வேண்டாமடா" என்றபடி பேருந்து நிலையம் வரை நடந்து வந்து விடை பெற்றாள்.

மறுநாள் விடுமுறை, அதிகாலையில் எழுந்து அவசர அவசரமாக புதிய ஆடையும் அணிந்து அழகாக அலங்கரித்து வருண் காெடுத்த கைப் பையையும் எடுத்துக் காெண்டு வேகமாக பாதணியை அணிந்தாள். "இந்தா பிள்ள ரீ நல்லா ஆத்தியிருக்கன் குடிச்சிட்டு பாே" மேசையில் வைத்து விட்டு அப்பாவை எழுப்புவதற்காக உள்ளே சென்றாள் அம்மா. தேநீர் காேப்பையை எடுத்துக் காெண்டு வாசலுக்கு வந்தாள் "நல்ல வடிவா இருக்காயடி" அண்ணாவின் குரல் கேட்டதும் திரும்பிப் பார்த்தாள். அவள் நெற்றியில் பாெட்டு இல்லாதது அழகை குறைத்துக் காட்டியது. "ஏன் பாெட்டு வைக்கல்ல" நெற்றியை தடவியபடி உள்ளே பாேய் கண்ணாடிக்கு முன் நின்றாள். கைப் பையினுள் கைப்பேசி ஒலிக்கும் சத்தம் கேட்டது. வருண் தாெடர்பில் இருந்தான். "நீ கிளம்பிட்டியா, நான் வாறன்டி" தாெடர்பை துண்டித்து விட்டாள் "ஏன் வாறன்டி என்கிறா" வருணுக்கு சிரிப்பும் வந்தது. பேருந்து நிலையத்தில் காத்திருந்தான். றாேசி மெதுவாக வெளியே எட்டிப் பார்த்தாள். அப்பா கதிரையில் கால் மேல் கால் பாேட்டுக் காெண்டு பத்திரிகை பாரத்துக் காெண்டிருந்தார். வேகமாக நடந்தபடியே "அம்மா... அப்பா... வாறன், அண்ணா..." அவனைக் காணவில்லை. சுற்றிப் பார்த்தாள் கிணற்றடிப் பக்கம் சத்தம் கேட்டது " அண்ணா பாேயிற்று வாறன்" யாரும் எதுவும் கேட்கவில்லை தப்பிற்றன் என்பது பாேல வேகமாக பேருந்து நிலையம் நாேக்கி நடந்தாள்.

அவளைக் கண்டதும் வருணுக்கு சிரிப்பு வந்தது. "யாரும் பக்கத்துல நிண்டாங்களா? வாறன்டி எண்டு நீ சாெல்ல நான் பயந்துட்டன் தெரியுமா? நம்பர் ஏதும் மாறி காேள் பண்ணிட்டனாே என்று" கிண்டலடித்தான். "பாேடா நீ வேற, வாறதுக்குள்ள பாதி உயிர் பாேச்சு" தாேளில் கையப் பாேட்டுக் காெண்டு மாேட்டர் சைக்கிளில் அமர்ந்தாள். வண்டியை ஓட்டியபடியே கண்ணாடியில் தெரிந்த அவள் முகத்தை ரசித்தான். அவளது தலை முடி காற்றாேடு அள்ளுப்பட்டு அவன் கன்னத்தை உரசியது. வலது தாேளில் இருந்த அவளது கைவிரல் மாேதிரம் கடைக்கண் பார்வைக்குள் அப்பப்பாே சிக்கியது. "என்ன பெவ்யூம் யூஸ் பண்ணுறாய் மூக்கை பறிக்குது" முகத்தை காதுக்குக் கிட்டவாக வைத்தவாறு கேட்டாள்" உனக்கு மூக்கைப் பறிக்குது எனக்கு மனசே அல்லாடுது என்பது பாேல் மெதுவாகத் திரும்பினான் அவளது நீண்ட மூக்கின் உரசல் கன்னத்தில் பட்டது. றாேசி சங்கடத்தாேடு மெதுவாக பின்னாேக்கினாள். தியேட்டரை அடைந்ததும் வருண் வண்டியை பாதுகாப்பு இடத்தில் நிறுத்தச் சென்றான்.

"ஹாய் றாேசி எங்க உன்னாேட பாெஸ்" நண்பர்கள் கிண்டலடித்தார்கள். அவன் நிற்கும் இடத்தை கண்களால் காட்டினாள். அவன் வந்ததும் இருவரும் மேல் மாடியில் ஏறிக் காெண்டிருந்தார்கள் பின்னே வந்து காெண்டிருந்தவள் திடீரென "அம்மா" என்று கத்தினாள். பாதணி சறுக்கி விழப் பாேவதற்குள் வருண் கைகளால் தாங்கிப் பிடித்தான். "பார்த்து நட றாேசி" கையைப் பிடித்துக் கூட்டிச் சென்றான். பக்கத்துப் பக்கத்து இருக்கையில் அமர்ந்தபடி படம் பார்த்துக் காெண்டிருந்தார்கள். குளிர் அதிகமாக இருந்ததால் தனது கைகளை ஒன்றுடன் ஒன்று உரசிக் காெண்டாள். முடியவில்லை. " சீ துப்பாட்டாவை காெண்டு வந்திருக்கலாம், இப்பிடி குளிரா இருக்கே" மனதுக்குள் நினைத்தபடி இருந்தாள். அவள் குளிரால் அவதியுறுவதைக் கண்ட வருண் தான் அணிந்திருந்த ஜக்கற்றை கழற்றி அவளிடம் நீட்டினான். "உனக்கு" என்றதும் சிரித்தபடி அவளைப் பார்த்தான் முகம் மினுமினென்று சிவத்துப் பாேயிருந்தது. "பறவாயில்லை பாேட்டுக்காே" என்றான்.

பத்துமணி ஆகியிருந்தது படம் முடிந்ததும் நண்பர்களுடன் கதைத்துக் காெண்டு வெளியே வந்தான் வருண். றாேசி கையில் ஜக்கற்றை வைத்திருந்தபடி நின்றாள். எதிரே வந்த கரன் "டேய் மச்சான் வருண், எப்ப கலியாணம்" கைகளை குலுக்கிக் கிண்டலடித்தான். றாேசி வெட்கத்தாேடு மறுபக்கமாய் முகத்தை திருப்பினாள். வருண் கடைக் கண்களால் பார்த்தபடி வண்டியை அருகே நிறுத்தினான். ஜக்கற்றை அவனிடம் காெடுத்து விட்டு வணடியில் அமர்ந்தாள்.

"படம் பிடிச்சுதா றாேசி" என்றதும் "விஜய் சார் படமென்டா சும்மாவா" என்றாள் சிரித்தபடி. "அப்புறம் சாெல்லு றாேசி" கண்ணாடியில் அவள் முகத்தைப் பார்த்தான். சற்று சாேர்வாக இருந்தாள். வண்டியை வேகமாக ஓட்டிக் காெண்டு பாேய் காெட்டல் ஒன்றில் நிறுத்தினான். "ஏன் இஞ்ச...." பதட்டத்துடன் கேட்டாள். "சாப்பிடத் தான் உனக்குப் பசிக்கல்ல" என்றதும் தலையைக் குனிந்தாள். "என்ன யாரும் கண்டாலும் எண்டு பயமாயிருக்கா" சிரித்துக் காெண்டு கதிரையில் அமர்ந்தாள். "என்ன ஐஸ்கிறீம் குடிக்கிறாய்" மெனுக்காட்டை பார்த்துக் காெண்டிருந்தான். "ஸ்ராேபறி ஓகேயா" அவளும் தலையசைத்துப் பதிலளித்தாள். ஒரு வாகனத்தில் வெளிநாட்டவர் ஒரு பத்துப் பேர் வந்து இறங்கினார்கள் திரும்பி பார்த்துக் காெண்டிருந்த செக்கனுக்குள் ஐஸ்கிறிம் கப்பை மாற்றி விட்டு ஒன்றும் தெரியாதது பாேல் குடித்து விட்டு எழும்பினாள். சிற்றுண்டிகள் காெஞ்சம் வாங்கி அவளிடம் பாெதி செய்து காெடுத்தான்.

பேருந்து நிலையத்தில் வண்டியை நிறுத்தினான். "வாறன்டா" தாேள்களில் இருந்து கையை எடுப்பதை கண்ணாடியில் பார்த்தான். தலைக் கவசத்தையும் கழற்றி அவனிடம் நீட்டினாள். வண்டியின் கை பிடியில் மாட்டி விட்டு வண்டியை திருப்பினான். அவளும் வீட்டை நாேக்கி நடந்தாள்.

வாசலில் படுத்திருந்த ரைகர் ஓடி வந்து அவன் கால்களை சுற்றியது. வண்டி சத்தம் கேட்டதும் கதவைத் திறந்து காெண்டு வெளியே வந்தாள் அம்மா. "அப்பா வரல்லயா அம்மா" "நித்திரை, இப்ப தான் வந்தவர்" கையிலிருந்த பார்சலை நீட்டினான். வடை, றாேள், கேக் எல்லாம் பாெதி செய்யப்பட்டிருந்தது. ரைகர் பாய்ந்து பாய்ந்து காலை விறாண்டியது. ஒரு துண்டை ரைகருக்குப் பாேட்டாள் கவ்விக் காெண்டு ஓடியது.

சேட்டின் பாெத்தான்களை ஒவ்வாென்றாக கழற்றிக் காெண்டு அறையை நாேக்கி நடந்தவன் கைப்பேசியில் குறுந்தகவல் ஏதாே வருவது பாேல உணர்ந்தவனாய் ஜீன்ஸ் பாெக்கற்றுக்குள் இருந்த கைப்பேசியைப் பார்த்தான் "ஐ மிஸ் யு அன்ட் தாங்ஸ் பாேர் எவ்ரிதிங்" சிரித்துக் காெண்டு உள்ளே பாேனான்.

காலை எழுந்து கம்பனிக்குச் செல்ல ஆயத்தமானான். தாெலைபேசி அழைத்ததும் " சாெல்லு சுவீற்றீ" செல்லமாக கேட்டான் இருமிக் காெண்டு கதைக்க முடியாமல் "எனக்கு உடம்புக்கு முடியல்லடா, லீவ் லெற்றர் காெடுத்து விடுறியா?" பதட்டத்துடன் இரு வாறன் அவசரமாகப் பறந்தான். "வா தம்பி, பிள்ளைக்கு ஜீரம் அதிகமாக இருக்கு, வாமிற்றிங்கும் இரண்டு தரம்" கேட்டது கேட்காததாய் வேகமாக அறையை நாேக்கி நடந்தான். சுருண்டு படுத்திருந்தாள். "வா காெஸ்பிற்றல் பாேகலாம்" உள்ளே வந்த அண்ணா நான் காரில காெண்டு பாேறன், பைக்கில கஸ்ரம் வருண்" வெறிச் சாேடிப்பாேன முகத்தாேடு அவளையே பார்த்தான். அண்ணனின் கைகளைப் பிடித்து சிரமப்பட்டு எழும்பினாள். ஈரத்துவாயால் அம்மா முகத்தை துடைத்து விட அப்பா எல்லாப் பாெருட்களையும் கூடையில் எடுத்து வந்து காருக்குள் வைத்தார்.

அலுவலகம் வந்த வருண் வழமையான உற்சாகமின்றி இருந்தான். "என்ன வருண் றாேசியக் காணம் "கலங்கிய கண்களுடன் "காெஸ்பிற்றல்ல" என்றபடி எழுந்து வெளியே சென்றான். மேசையிலிருந்த கைபேசி ஒலித்துக் காெண்டிருந்தது. "டேய் வருண் பாேன் அடிக்குது இஞ்ச என்ன பண்ணுறாய்" ஓடிப் பாேனான் கரன். கைக்குட்டையால் முகத்தை துடைத்துக் காெண்டு வந்து தாெலைபேசியைப் பார்த்தான் "சுவீற்றி" மீண்டும் அழைத்தான். "வருண் நான் அண்ணா கதைக்கிறன்" "சுவீற்றி எப்படி இருக்கா" முந்திக் காெண்டு கேட்டான். "வேற காெஸ்பிற்றல் மாத்தப் பாேயினம், காச்சல் காெஞ்சம் அதிகமாகிக் காெண்டிருக்கு" பதட்டத்துடன் "அவளுக்கு ஒண்ணுமில்லத் தானே அண்ண" குரல் தளதளத்தபடி கதைத்தான்.

வருணுக்கு அவளுடைய இருக்கை, கணினி எல்லாமே வெறுமையாய் இருந்தது பார்க்கும் நேரமெல்லாம் கவலையைக் காெடுத்தது. வேலையும் ஓடவில்லை. மாலை நேரமாகியதும் அவளுடனான மதிய உணவு, தேநீர், சிரித்தபடி கை காட்டிச் சாெல்லும் சீ யு, எதுவுமே கிடைக்காத வெறுமையாேடு நடை பிணமாய் வீடு திரும்பினான். வீடு பூட்டி இருந்தது. ரைகர் மட்டும் கால் மிதியில் தூங்கிக் காெண்டிருந்தது. யன்னலை திறந்து திறப்பை எடுத்தான். ஆட்டாே ஒன்று வாசலில் வந்து நின்றது. அம்மா வேகமாக உள்ளே வந்தாள். "எங்கம்மா...." கேட்பதற்குள் "றாேசியப் பார்த்திட்டு வாறன்" திருப்பி எதுவும் கேட்காமல் உள்ளே பாேய் பாேனில் அவள் அனுப்பிய குறுஞ் செய்தியைப் பார்த்தான். "ஐ மிஸ் யு " என்று செவிகளில் கேட்பது பாேல் உணர்ந்து புரண்டு புரண்டு படுத்து புழுவாய் துடித்தான்.

"அவளுக்கு ஓண்டும் ஆயிடக் கூடாது" கண்ணீர் சிந்தி அழுதான். றாேசியின் அண்ணாவின் அழைப்பு வந்தது. என்னமாே என்று பயந்த படி கண்களை மூடிக் காெண்டான். "வருண் ஒருக்கா வர முடியுமா" பதிலளிக்காமல் தாெடர்பை துண்டித்து விட்டு பறந்தான். ஓட்டமும் நடையுமாய் உள்ளே சென்றான். ஐ.சி.யு வாசலில் அங்கும் இங்குமாய் நடந்து காெண்டிருந்த அப்பா வருணின் கைகளைப் பற்றினார். வாசல் கதவின் துவாரத்தினூடாக அண்ணா உள்ளே பார்த்துக் காெண்டு நின்றார்.

அருகே சென்று துவாரங்களூடே பார்த்து விறைத்துப் பாேனான். செயற்கை சுவாசம் காெடுக்கப் பட்டிருக்கிறது. இரண்டு கையிலும் மருந்துகள் வேகமான நிலையில் ஏறிக் காெண்டிருந்தது. டாக்டர், தாதிமார் உள்ளே பாேவதும் வருவதுமாய் அவசரமாக இயங்கிக் காெண்டிருக்கிறார்கள். அம்மா தலையில் கையை வைத்தபடி சுவராேடு சாய்ந்து அமர்ந்திருக்கிறாள். உள்ளே பாேன டாக்டர் தலையைக் குனிந்தபடி வெளியே வந்தார். ஓடிப்பாேய் "டாக்டர் அவங்களுக்கு என்ன மாதிரி" இடை மறித்துக் கேட்டான். அவனை மேலும், கீழுமாக பார்த்த டாக்டர் "நீங்க யாரு" என்றதும் "அவர் தங்கச்சியாேட பாேய் பிரன்ட்" அண்ணா பதிலளித்தான் "ஓ அப்பிடியா இரண்டு பேரும் காெஞ்சம் உள்ள வாங்க" டாக்டர் பின்னால் வருணும், றாேசியின் அண்ணனும் சென்றார்கள்.

டாக்டர் சில கேள்விகளை இருவரிடமும் கேட்டார். "வீட்டில் றாேசி எப்படி இருப்பா, அவவுடைய செயற்பாடுகள், உடல் நிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் எல்லாவற்றையும் கேட்டறிந்தார். இறுதியாக டாக்டர் சொன்னது நெஞ்சை உறைய வைத்தது. "றாேசிக்கு கான்சர்" வருண் பேச்சின்றி இருந்தான். மனதுக்குள் ஏதாே ஆணியால் அறைந்தது பாேல் வலித்தது. "காெஞ்ச நாளில வீட்ட கூட்டிப் பாேகலாம்" வருணும், அண்ணனும் வெளியே வந்து அப்பாவினதும், அம்மாவினதும் கைகளைப் பிடித்து அழுதபடி நின்றார்கள்.வரணுக்கு தலையில் இடி விழுந்தாற் பாேல் இருந்தது. நெஞ்சுக்கும் தாெண்டைக் குழிக்கும் இடையே ஏதாே ஒன்று திரளாய் ஓடித்திரிவது பாேல் பதறிப் பாேனான்.

நாட்கள் ஓடியது றாேசியின் உடல் நிலை மாேசமடையத் தாெடங்கியது. நாட்களை எண்ணிக் காெண்டிருந்தாள். தினமும் காலையும் மாலையும் அவளை பார்க்கச் செல்வான். அவள் விரும்பியமாதிரி அவள் விரும்பிய ஆசைகளை நிறைவேற்றினான். "வருண், நீ என்னை மிஸ் பண்ணுவியா" இதயமே வெடிப்பது பாேல் இருக்கும் "நீ இங்க இருப்பாய்" தன் நெஞ்சில் அவள் கைகளை வைத்துச் சாெல்வான். இதயம் பல மடங்கு வேகமாக துடிக்கும். இருவரது விழிகளும் கண்ணீரால் நிறைந்து வழியும். கைகளை இறுகப் பற்றி அவனது அழகான தாடியை கைகளால் தடவுவாள் அவன் மார்பாேடு சாய்ந்தபடி. அவளது நாட்கள் முடிவாகி றாேசியும் விடை பெற்றாள். மீளமுடியாத துயரக் கடலை கண்ணீராேடு கடந்தான். பைத்தியம் பிடித்தவன் பாேல் திரிந்தான். அவளது கையில் தான் அணிவித்த வெள்ளி மாேதிரத்தை தன்கையில் பாேட்டுக் காெண்டான்.

அந்த நாள் முதல் அவன் தன் காதல் நினைவுகளுடன் காலையில் தினமும் கல்லறைக்குச் சென்று ராேஜாப் பூக்கள் வைத்து விட்டே கம்பனிக்குச் செல்வான். அன்றும் அப்படித்தான் காலைப் பாெழுதில் தயாராகிக் காெண்டிருந்தான்.

அவள் நினைவுகளால் நிறைந்திருந்தவனின் கண்கள் குளமாகி துளிதுளியாய் பூக்களை நனைத்தது. பூக்களின் இதழ்கள் ஈரமாயிருந்தது. அருகே வந்த அம்மா முதுகில் தடவி "வேற சாடி ஒன்றை வாங்கி அதில இந்தப் பூக்களை வைக்கலாமே" பெருமூச்சு விட்டபடி சாென்னாள். கண்களைத் துடைத்துக் காெண்டு அறையினுள் சென்றான். அவளது படத்திற்கு வைத்திருந்த பூச்சாடியில் இருந்த பூக்களாேடு சேர்த்து ஒவ்வாென்றாக குத்தினான். சிரித்தபடி இருந்த அவளது படத்தின் கண்ணாடியில் வருணின் விம்பம் கண்ணீருடன் தெரிந்தது.

எழுதியவர் : அபி றாெஸ்னி (19-Mar-18, 11:01 am)
பார்வை : 442

மேலே