எனக்கு உன்மேல் விருப்பம்

நான் நின்ற நிழற்குடைக்கு
உன்னை அழைத்துவந்து
என்னருகே நிறுத்தியது
அப் பெரும் மழை.

பொன்னழகு மேனி
கண்ணழகில் ஈர்க்கும்
பூலோக தேவதையோ?
மழைத்துளிகள்
சுட்டனவோ?வெடுக்கென
கைதனை மடக்கிக்
கொண்டாய்!

மழைச்சாரலில் தோன்றிய
வானவில்லைக் கண்டு
ரசித்தாய்!
நானும் ரசித்தேன்
வானவில் இன்னொரு
வானவில்லை ரசிப்பதை.

நகர்ந்து வா!நகர்ந்து வாயென
பஸ் கண்டக்டரின் சத்தமிட
நகர்ந்து அருகருகே
வந்து நின்றோம்
சட்டெனெ பஸ் டிரைவர்
பிரேக்கை அழுத்த
தடுமாறிய நான் உன்
கைகளை அழுத்தி பிடிக்க
காதல் தீ பரவியது
உடலெங்கும்!
உன் சிரிப்பின் சுவை
என் நாவில் தெரிந்தது!

அந்நிகழ்வின் நினைவிலேயே
உன் சிரிப்பின் சுவையிலே
பகலும் கழிந்ததடி
இரவோ என்னை கண்ணயர
விடாது கவிதை எழுத
சொன்னது
எனக்கு உன்மேல் விருப்பம்
என்று!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (20-Mar-18, 12:20 am)
பார்வை : 623

மேலே